பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 காவியமும் ஓவியமும் போர் புரிந்து வென்றதை வருணித்தனர். கள மெல்லாம் குருதிவெள்ளம் பாய, அந்த வெள்ளத்திலே இறந்த யானேகளும் வீரர் உடல்களும் மிதக்க, கழுகு களும் பருந்துகளும் தம் வயிருர உணவுபெற, அவன் செய்த வீர விளையாட்டை வீரச் சுவையும் கோபச் சுவையும் புலப்படச் சொன்னர்கள். அவ்வளவு கொடுமையை உடையவன ' என்று கினேக்கும்படி இருந்தன, அவர்கள் சொன்ன செய்திகள். போர்க்களத்திலே அவன் அப்படி இருந்திருக் கலாம் ; ஆனால் இங்கே புலவர்களிடையே அவன் மிகவும் சாதுவாக ஒரு குழங்தையைப்போல அமர்க் திருந்தான். கவிஞர்களிடம் மிகவும் பணிவாக நடந்து கொண்டான் ; மென்மையாகவும் இனிமையாகவும் பேசினன். அவனுடைய வார்த்தைகளிலே அன்பு தான் இருந்தது ; மருந்துக்குக்கூடக் கடுமையில்லை. புலவர்கள் பேசும்போது அந்தப் பேச்சை மிகவும் ஆர்வத்தோடும் மரியாதையோடும் கேட்டான். பார்வையிலே ஒரு குளிர்ச்சி, உடலிலே ஒரு பணிவு, வார்த்தைகளிலே ஒரு குழைவு ஆகிய இவ்வளவும் அவனது கோலத்தை இனிமைப் பிழம்பாகச் செய்தன. இவன்தான போர்க்களத்தில் பகைவர்களைப் படுகொலை செய்து தன் கைக்குச் செவ்வண்ணம் திற் றியவன் இருதயத்திலே சென்று தண்மையைப் புகுத்தும் இவனுடைய பார்வையா தீப்பொறிகளைக் கக்கியிருக்கும் ' என்று எண்ணமிடலாள்ை ஒளவை. அப்பொழுது அவள் அகக் கண்ணின்முன் சற்றுமுன் கண்ட காட்சி, நீர்த்துறை படியும் களிறு, வந்தது. ஊரை அன்ருெரு நாள் அலேத்து வருத்திய அதே யானை இன்று சிறு பிள்ளைகள் தன் தந்தத்தைக் கழுவி விளையாட, சாந்த கிலேயோடு. கிற்கிறது. இரண்டு கிலேயிலும் அதே யானேதான். அன்று மதம் பெருகி கின்றது : இன்று மதம் அடங்கி கிற்கிறது. இந்த அதியமானும் அப்படித்தான் இருக்கிருன்.