பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதே யானே. 81 பகைவருக்கு மதம் பட்ட யானே அவன். புலவர் களுக்கோ நீர்த்துறை படியும் களிருக உள்ளான். எவ்வளவு பொருத்தமான உவமை கருத்து அழகிது உள்ளத்தே பதிந்த அக்கருத்து உடனே ஒளவையின் வாக்கில் கவிதையாக வெளிப்பட்டது. அதியமான நோக்கிப் பாடுகிருள் ஒளவை : ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின் நீர்த்துறை படியும் பெருங்களிறு போல இனியை பெரும எமக்கே, மற்றதன் துன்னருங் கடாஅம் போல * இன்னுய் பெரும நின் ஒன்ன தோர்க்கே. - -புறநானூறு - ஒளவையார் பாட்டு. (ஊர்க் குறுமாக்கள் - ஊரிலுள்ள சிறு பிள்ளைகள். வெண்கோடு - வெள்ளேயான தந்தத்தை, கழாஅலின் - கழுவுதலால், துன்னரும் கடாஅம் போல - யாரும் அணு குதற்கரிய மதம்பட்ட கிலேமையைப் போல. இன்னுய் - கொடியவனய்ை. ஒன்னதோர்க்கு - பகைவர்களுக்கு.)