பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"தானே கள்வன் சல சலவென்று ஓடும் ர்ே. அதன் கரையிலே, அவனும் அவளும் காதல் பூண்டார்கள். அங்கே ஒரு வரும் இல்லாத தனிமையிலே அவ்விருவரும் இருங் தனர். ஆயினும் அவளுக்கு எல்லாம் நிரம்பி யிருந்தது போலத் தோன்றியது. இன்ருே, அவள் தன் வீட்டில் தன் தாய் தந்தையரும் சுற்றத்தாரும் தோழியரும் சூழ இருக்கின்ருள். ஆல்ை அவளுக்கு எல்லாம் சூன்யமாக இருக்கின்றது. - - ... ' அவன் அவளைப் பிரிந்தான். சிலகாளே இந்தப் பிரிவு ; விரைவில் வந்து உன்னே மணப்பேன். அது வரையிலும் பொறுத்திரு' என்று அவன் உறுதி மொழி கூறிப் பிரிந்தான். அவள் அவனே நம்பினுள். உளமறியக் காதல் புரிந்தவன் மீண்டுவந்து உலகறிய மணம் புரிவானென்று ஆர்வத்தோடு காத்திருந்தாள். காதலின்ப கினேவிலும் காதலனே எதிர் பார்க்கும் ஆர்வத்திலும் காலத்தைக் கழித்துக்கொண் டிருந்தாள். ஒரு கணம் போவது ஒரு யுகமாகத் தோற்றியது. பிரிவுத் துன்பத்தைப் பொறுத்திருங் தாள். அந்தத் துன்ப முடிவிலே இணையற்ற இன்பம் இருக்கிறதென்ற கினேவு அதனைப் பொறுக்கும் மன வலியைத் தந்தது. . அவன் வரவில்லை. அவள் உள்ளத்தே சிறிது பயம் முளைக்கத் தொடங்கியது. ஆலுைம் அன்பு அதை மறைத்தது. அவளுடைய உயிர்த்தோழி அவ. ளைத் தினமும் ஆயிரம் கேள்விகள் கேட்கிருள். அவள் ம்ேனியில்ே வாட்டம் தோற்றுகின்றது. தோழி அது