பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 காவியமும் ஒவியமும் கண்டு, “ஏன் இப்படி வாடுகிருய் ' என்று வினவு கிருள். தன் உள்ளம்போலப் பழகும் அத்தோழிக்கு அந்தக் காதலி தனக்கு ஒரு காதலன் வாய்த்ததைச் சொல்லுகிருள். அவன் தன் உள்ளத்தைக் கொள்ளே கொண் டதும், இன்னுரை பேசித் தலையளி செய்ததும், அள வளாவியதும், பிரியேன், பிரிந்தால் உயிர் விடுவேன்’ என்று சொல்லியதும், பிரிந்து வருவேனென்று உறுதி மொழி கூறியதும் - எல்லாம் சொல்கிருள். எல்லாவற்றையும் கேட்ட பிறகு தோழி காத விக்கு அச்சத்தை உண்டாக்குகிருள். - தோழி: ; காதல் புரிந்த கதை நன்ருயிருக் கிறது . அவர் குளுறவு கூறி உன்னேயே மணப்ப தாகச் சொன்னர் என்ருய். அதற்குச் சாட்சியாக யார் இருந்தார்கள் ? காதலி கினைத்துப் பார்க்கிருள். இதற்கு முன்பு பழைய நினைவு வரும்போதெல்லாம் அந்தக் காதல னும் அவன் பேசிய பேச்சும் இன்பமும் வந்து' மனத்தில் நிரம்பும். இப்பொழுது அவனே விலக்கி அந்த இடத்தை கினேந்து பார்க்கிருள். அவனத் தவிர அங்கே யார் இருந்தார்கள்? தனிமைதான். அந்தத் தனிமை அன்று இனித்தது. இன்ருே அதை மின்க்கையிலேயே உள்ளம் கடுங்குகிறது. தோழிக்கு விடை சொல்கிருள். . காதலி: யாரும் இல்லை. , * தோழி: அப்படியா : ஒருவரும் இல்லையா ? நன்ருக யோசித்துப் பார். பலர் முன்னிலையில் காய கனக் கைப் பிடிப்பதல்லவா திருமணம் ? நீ காதல் மணம் செய்து கொண்ட அப்பொழுது ஒருவரும் இல்லையா ? : - . காதலி சிந்தேைலாகத்திலே இருக்கிருள். ఆమ35 தேடித் தேடிப் பார்க்கிருள். ஒரு பூதரும் இல்லை.