பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"தானே கள்வன்' - 3 உண்மையில் இல்லையா ? அவன் இருந்தான். அவன் ஒருவனே இருந்தான். காதலி: தானே. தோழி: அவர் ஒருவர்தாம் இருந்தாரா? யாரும் இல்லாத இடத்தில் உன் கலத்தை வெளவிய அவரை நம்பியா நீ உருகுகிருய் ஒருவரும் காணுமல் ஒரு பொருளே வெளவுபவன் கள்வன் அல்லவா ? - இந்த வார்த்தை காதலியின் உள்ளத்தே தைக் கிறது. அவன் தன் உள்ளம் கவர் கள்வன் என்பதை அவள் என்ருக உணர்ந்திருக்கிருள். தோழி சொல் வதிலும் உண்மை இருக்கிறது. பெருமூச்சு விடு கிருள் ; அந்த மூச்சோடு வருகிறது அந்த வார்த்தை. காதலி: கள்வன்! தோழி: மறைவிடத்திலே காதல் புரிந்த கள்வன் வார்த்தையிலே கம்பிக்கை வைக்கலாமா ? அவர் அது கூறினர், இது கூறினரென்று அவற்றை உண்மையாகக் கொள்ளலாமா? அவர் அக்த வார்த்தைகளைப் பொய்யாக்கி விட்டால் நீ என்ன செய்வாய் ? இந்தக் கேள்வியை இதுவரையில் காதலி எண் ணிைப் பார்க்கவில்லை. அவர் பொய் கூறுவாரென்று எண்ணுமளவு அவள் மனம் மாசுபடவில்லை. இப் பொழுதோ தோழியின் வார்த்தைகள் அவள் நெஞ் சைக் கலக்குகின்றன. அவர் தாம் கூறிய வார்த்தை களேப் பாதுகாவாமல் அந்தச் சூளுறவினின்றும் பொய்த்தால் அவள் என்ன செய்ய முடியும் ? அவள் தன் நெஞ்சையே கேட்டுக் கொள்கிருள் : காதலி: தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ (காதலர் அந்த உறுதி மொழியினின்றும் தப்பினால் நான் என்ன செய்வேன் 1) திருப்பித் திருப்பி இந்தக் கேள்வியை அவள் கேட்டுக் கொள்கிருள். அவன் மொழி தவருன் என்ற