பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"தானே கள்வன்' - 5 தோழி: காரையா? கன்ருக யோசித்துச் சொல். உண்மையிலே காரை இருந்ததா? அக்கினி ஓர் இடத்தைப் பற்றிக்கொண்டால் அதனை முற்றும் கவர்ந்துகொள்வதுபோல, சாட்சி யைத் தேடித் திரிந்த காதலியின் உள்ளம் நாரையைப் பற்றிக்கொண்டது. அதை விடாமல் பற்றிக்கொள் கிருள். அவளது சிந்தனை யரங்கிலே இதுவரையில் காதலன் கின்ருன். இப்பொழுது நாரை வந்து கிற்கிறது. காதலன் மறைகிருன். - அந்த நாரையை அடிமுதல் முடிவரையில் பார்க்கிருள். அது தன் ஒற்றைக் காலிலே நிற்கிறது. அந்தக் காலும் அதன் பாதமும் அவளுக்குத் தினேயின் தாளே கினைப்பூட்டுகின்றன. பூமிக்கு மேலே புடைத்துத் தோன்றும் நான்கைந்து பச்சை வேரும் அவற்றின்மேலே நிற்கும் தினேப்பயிரின் தண்டும் காரையின் ஒற்றைக்காலோடு சேர்ந்து கினேவுக்கு வருகின்றன. மேலே உள்ள காரையின் உடம்பைப் பார்க்காமல் அதன் காலே மாத்திரம் பார்த்தால் நிச்சய மாகத் தினத்தாளென்றுதான் கினேக்கும்படி நேரும். அவள் சிங்தனே, நாரையைப் பாதாதிகேசமாக அளந்துகொண் டிருக்கையில் தோழி மறுபடியும் கேட்பது காதிற் படுகிறது. - தோழி: அது காரைதான ? - அதில் என்ன சந்தேகம்? தினத் தண்டுபோல இருக்கும் பசுங்காலையுடைய அதை நான் மறப்பேன' என்று எண்ணிள்ை காதலி. அவள் சொல்லுகிருள் : காதலி: தினத்தாள் அன்ன சிறு பசுங்கால குருகு (தினையின் தண்டுபோன்ற சிறிய பசிய காலே யுடைய காரைதான்.) தோழி விட்டபாடில்லே. - - தோழி:கார்ையா சாட்சி : மிகவும் வேடிக்கை தான்! அது என்ன செய்துகொண்டிருந்தது