பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 காவியமும் ஓவியமும் நின்று வேலியைப்போல உள்ளன. அந்த எல்லேக் குள்ளே பலாமரங்கள் குலுங்கக் குலுங்கக் கனிந்து நிற்கின்றன. அங்தப் பலாமரமோ வேர்ப்பலா ; பழங்களெல்லாம் வேரிலே காய்க்கின்றன. பூமியி லிருந்து வெடித்துப் புறப்படுகின்றன. கிலமே அவற்றிற்கு ஆதாரமாக இருக்கிறது. இவ்வளவு பாதுகாப்பாக அவை வளரும்போது அவற்றிற்கு என்ன குறை?" என்கிருள் அவள். இந்தக் குறத்தி என்னவோ சொல்லப் போகிருள். அதற்காகத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிருள் என்று எண்ணிய காதலன், 'அந்தப் பலாப்பழ விசாரம் இப்போது எதற்கு ?" என்று கேட்கிருன். w - “எதற்கா ? அந்த விஷயம் யாருக்குத் தெரியப் போகிறது !” - 'எந்த விஷயம் ?" "எங்கள் சாரலிலே விளேயும் பலாப்பழத்தின் நிலையை அறிவது எளிதல்லவே! அதுவும், வேரிலே பழுத்து, கிலத்தால் தாங்கப்பெற்று, மூங்கில்வேலியின் காவலுக்குள்ளே உள்ள பழத்தையுடைய உங்கள் மலேச்சாரலை மாத்திரம் அறிந்தவர்களுக்கு எங்கள் ஊர் விஷயம் எப்படித் தெரியப் போகிறது ?” "உங்கள் சாரலில் மட்டும் என்ன தனிச் சிறப்பு இருக்கிறது?" அதைத்தான் சொல்ல வருகிறேன். அதோ பார் அந்தப் பலா மரத்தை. அதில் எவ்வளவு பெரிய பழம் தொங்குகிறது, பார் ' அடே அப்பா ! உண்மையிலே பெரிய பழங் 11 مـثـ ● தான் '. 'அதன் காம்பைப் பார்த்தாயா ? அது எவ் வளவு சிறியது பார்த்தாயா? அதைத் தாங்கும் கொம்பு எவ்வளவு சிறிதாக உள்ளது ? அவ்வளவு