பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 காவியமும் ஓவியமும் மனிதர்கள் அடிக்கடி பிரயாணம் செய்வார்களா? சிறிது நேரம் கழித்து இரண்டு உருவங்கள் நிழலேப் போல் நெடுங் தூரத்திலே தெரிகின்றன. அந்த நிழலே கம்பிக் காத்து நிற்கிருள். அந்த உருவங்களின் அங்க அடையாளங்கள் ஒருவாறு புலப்பட்டு அவர்கள் ஆணும் பெண்ணுமென்று தெரிந்தால் இவளுக்கு கம்பிக்கை உதயமாகிறது. ஆனல் அருகில் வந்த போது மறுபடியும் அவள் ஏமாந்து போகிருள். அருகில் வந்ததும் அந்த உருவங்கள் இவள் உள்ளத் திலே இருளேத்தான் புகுத்திச் செல்லுகின்றன. தூரத்திலே எது தெரிந்தாலும் இவள் கூர்ந்து கவனிக்கிருள். காலோய்ந்த யானே வருகிறது : பயங்து சாகிருள். வேறு யாரோ ஆடவர்கள் வரு கிருர்கள். அவர்களே என்னவோ கேட்கிருள். நீ எங்கேயம்மா போகிருய்?' என்று அவர்கள் கேட் கிருர்கள். இவள் விடை கூறவில்லே. இவளுக்கே எங்கே போகிருேமென்று தெரியவில்லே. ஆம் ; இவளுடைய லக்ஷயம் ஒரிடமல்ல ; வேறு ஏதோ! 'பாட்டீ, எங்கே போகிருய் ?" "எனக்கே தெரியாதப்பா." 'எவ்வளவு நாழிகை இப்படி நடந்துகொண்டே இருப்பாய் ?” 'தெரியாதப்பா !” "எப்பொழுது உன் பிரயாணத்துக்கு முடிவு நேரும் ?: - - "வாழ்க்கைப் பிரயாணத்துக்கா ?" "உன் காலில் வன்மை இல்லையே ?" 'ஆம் அப்பா, என் கால் தவறுகிறது ; கான் ஓர் இடத்தில் வைத்தால், அது ஒரிடத்தில் போகிறது.” 'எதையோ மிகவும் ஆவலாகப் பார்க்கிருயே ?” "பார்த்துப் பார்த்து என் கண்ணில் இருக்கிற அரைக்காற் பார்வைகூட மங்கிவிட்டது.” *