பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழவியின் பிரயாணம் 21. 'எதைப் பார்க்கிருய் ?" - "என் துரதிருஷ்டத்தைப் பார்க்கிறேன்.” 'ஒன்றும் விளங்கவில்லையே பாட்டி ' நான் பார்க்கிறேன் ; சூரியனும் சந்திரனும் இல்லாத வானத்திலே அந்த இரண்டு சுடருருவங் களையும் தேடிப் பார்க்கும்போது ஆயிரக் கணக்கான நட்சத்திரங்கள் தோன்றுகின்றன. எல்லாம் நட்சத் திரங்கள் ; மதியில்லை; கதிரவனும் இல்லை !' 'அது போல-?” 'நான் பார்க்கிறேன். என்னேச் சேர்ந்தவர்களைத் தேடிப் பார்க்கிறேன். அகலிரு வானத்து மீனேக் காட்டிலும் பலர் இங்கே போகிருர்கள் ; இந்த உலகத்திலுள்ள எல்லோரும் ஒருவர் பின் ஒருவரர்க் இங்கே வருகிருர்களென்று தோற்றுகிறது. இவ் வளவு பேர்களில் எல்லோரும் பிறரே. அவர்களைக் காணவில்லை.” - 'அவர்கள் யார் பாட்டி ?' 'எழில் திரண்ட கங்கை ஒருத்தி ; அவளுக்குப் பற்றுக்கோடாக கின்ற ஆண் மகன் ஒருவன்.” 'அவர்கள் இங்கே ஏன் வந்தார்கள் ?” “என் பாவம் ! எங்களவர் செய்த பாவம் ! பாவ மல்ல; எங்கள் அறிவின்மை." so 'கதையை முழுவதும் சொல்லு பாட்டீ' "அவள் என் மகள். நான் அவளை வளர்த்த செவிலி. மார்மேலும் தோள்மேலும் வைத்து வளர்த் தேன். அவளுடைய உள்ளத்தைக் கொள்ளைகொண்ட ஆண் சிங்கம் ஒன்று உண்டென்ற உண்மையை உணரும் சக்தி எனக்கு இல்லை. அவள் அவனுடைய அன்பிலே இன்பங் கண்டாள். அவள் குறிப்பறிந்து அவனே மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்ளும் பாக்கியம் எங்களுக்கு இல்லாமற் போயிற்று. அவளுடைய காதல் எவ்வளவு அருமையானது என்பதைத் தெரிந்துகொள்ளவில்லை. அவர்கள்