பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ப வாழ்வு நன்ருக முற்றி விளங்த தயிர் ; முளிதயிர். முதல் நாள் இரவு மிகவும் சிரத்தையோடு காய்ச்சிப் பிரை குத்திய தயிர். அதை எடுத்து வைத்துக்கொண்டு அந்த மெல்லியலாள் தன் கையாலேயே சிலுப்பத் தொடங்குகிருள். காந்தள் மலரின் இதழ்களைப் போன்ற தன் மெல்லிய கை விரல்களால் பிசைகிருள். அவசர அவசரமாகப் பிசைகிருள். தன்னுடைய காயகனுடைய பசி வேளேக்கு உணவு படைக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் அவள் சமையல் செய் கிருள். பெரிய விருந்து சமைத்து விடவில்லை. சோறு சமைத்து விட்டாள். மோர்க்குழம்பு பண்ணப் போகிருள். அதற்காகத்தான் அங்த முளிதயிரைத் தன் காங்தள் மெல்விரலால் பிசைகிருள். அதோடு சேர்க்க வேண்டியவற்றை யெல்லாம் அரைத்து வைத்திருக்கிருள். எல்லாவற்றையும் அதில் இட்டுக் கலக்குகிருள். தன் நாயகன் காத்துக்கொண் டிருக்கிருனே என்ற எண்ணம் அவளே முடுக்குகிறது ; ஆயிற்று ; தாளித்துக் கொட்ட வேண்டியதுதான். சட்டென்று கையைத் தன் புடைவையிலே துடைத்துக் கொள்கிருள். செல்வத்திலே வளர்ந்த அவளுக்குப் புடைவை வீணுகப் போகுமே என்ற ஞாபகமே இல்லே. அவர் காத்திருக்கிருர் என்ற ஒரே எண்ணங்தான். அவன் அவசரப்படுகிரு ைஎன்ன ? அப்படி ஒன்றும் இல்லை. அவள் மிக்க அன்போடு பரபரப் புடன் செய்கிற இந்தச் சமையலேப் பார்த்துச் சிரித்த படியே நிற்கிருன் அவன். அங்த உணவை உண்ணு வதைக் காட்டிலும் அவள் அதைச் சமைக்கும் வேகத்தில், அதற்காக அவள் உடம்பை நெளித்துக்