பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ப வாழ்வு 29 கொள்ளும் கோணலில், இன்னதுதான் செய்ய வேண்டுமென்ற வரையறையே இல்லாமல் அவள் கையும் காலும் துடிக்கிற துடிப்பில் அவன் ஒரு தனி அழகைக் கண்டு களிக்கிருன். அந்தப் புடைவை அழுக்காகிவிட்டதே, அதைக் கவனிக்கிருளா ? இல்லவே இல்லை ; அந்தப் புடைவை யோடேதான் அவள் சமைக்கிருள். அடுப்பில் கரண்டியைப் போடுகிருள் ; தாளித்துக் கொட்டு கிருள். தாளித்துக் கொட்டினுல்தான் என்ன ? அதையேயா பார்த்துக்கொண் டிருக்க வேண்டும் ? அதிலே ஒரு திருப்தி அவளுக்கு. அந்தத் தாளித்த புகை குவளைமலரைப் போன்ற அவளது கண்ணேக் கவிகிறது. அவசர அவசரமாக ஒரு கையால் கண்ணையும் துடைத்துக் கொள்கிருள். 'குவளே உண் கண் குய்ப்புகை கமழ அவள் துழாவிச் சமைத்த அந்த இனிய புளிக் குழம்பு, தீம்புளிப்பாகர், இப் போது தயாராகிவிட்டது. இலே போடுகிருள் ; பரிமாறுகிருள். வெறும் பச்சை மோர்க் குழம்புதான் அது. அதை அவன், 'மிகவும் நன்ருக இருக்கிறது ; மிகவும் கன்ருக இருக்கிறது ' என்று கொட்டை கொட்டிக்கொண்டு உண்கிருன்; 'இன்னும் கொஞ்சம் போடு, இன்னும் கொஞ்சம்” என்று கேட்கிருன். இனிது எனக் கணவன் அதை உண்பதல்ை அவள் பூரித்துப் போகி ருள். அவள் என்ன பண்ணிவிட்டாள் அறுசுவை உண்டி சமைத்துவிட வில்லை. ஆனலும் தன் மாசற்ற அன்பைக் குழைத்துச் செய்தாள். அந்த அன்பை உணர்ந்து அவன் உண்கிருன்; பாராட்டுகிருன். அவள் உள்ள மகிழ்ச்சி முகத்தில் லேசாகத் தெரிகிறது. அந்த ஒள்ளிய நெற்றியையுடைய செல்வ மகளது முகம் மிகவும் நுண்ணிதாக மகிழ்கிறது. திருப்தியின் ரேகையும், உள்ள மலர்ச்சியின் பொலிவும் அந்த முகத்தை அழகு செய்கின்றன.