பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 காவியமும் ஒவியமும் இந்த இன்பவாழ்வின் காட்சியை அவளுடைய பிறந்த வீட்டிலிருந்து வந்த செவிலித்தாய் பார்க் கிருள். பார்த்துவிட்டு மீட்டும் தன் ஊருக்குப் போகிருள். பெண்ணின் தாய் செவிலியைப் பார்த்து, 'போனயே ; குழந்தை எப்படி இருக்கிருள் மாப் பிள்ளே அவளே கன்ருக வைத்துக்கொண் டிருக் கிருன ? சந்தோஷமாக இருக்கிருளா ?” என்று கேட் கிருள். அவள் தான் கண்ட காட்சியையே விடை யாகச் சொல்கிருள் : o - முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழாஅ துடீஇக் குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் த்ான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவன் உண்டலின் துண்ணிதின் மகிழ்ந்தன் ருெண்ணுதல் முகனே. - -குறுந்தொகை - கூடலூர்கிழார் பாட்டு, (முளி - விகளந்த பிசைந்த - குழப்பிய. கலிங்கம். ஆடை. கழர்அது - துவைக்காமல். உடீஇ - உடுத்து. உண்கண் - மையுண்ட கண். குய்ப்புகை - தாளிதப்புகை. து.ழந்து- துழாவி. அட்ட சமைத்த, ம்ேபுளிப் பாகர்இனிய புளிச்சுவையையுடைய குழம்பு. நுண்ணிதின் - மிக நுண்மையாக மகிழ்ந்தன்று - மகிழ்ந்தது. ஒண்ணுதல் முகன் - விளக்கத்தையுடைய நெற்றியையுட்ையவளது - முகம்.) * . . " - - - - '.