பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 காவியமும் ஒவியமும் கிருள். இதுதான் சமயமென்று கருதி அவள் தலை விக்கு ஒரு காதலன் அமைந்த செய்தியைக் குறிப் பாய்த் தெரிவிக்கிருள். அந்தக் குறிப்பைச் செவிலி உணரவில்லே. இதனிடையில் தலைவியை மணந்துகொள்ள யார் யாரோ வேறு முயற்சி செய்கிருர்கள். தன் காதலனேயன்றிப் பிறரை மணந்தால் தன் கற்பு வழுவுமாதலால் இந்தச் சிக்கலினின்று நீங்கும் வழி என்னென்று ஆராய்ந்து மறுகுகிருள் காதலிள கங்கை. தோழி அதனே அறிந்து வழி உண்டாக்கு கிருள். தலைவனப் பார்த்து, 'இவளே மணம்பேச அயலாரெல்லாம் வருகிருர்கள். நீ மணம் பேச வந்தால், தங்கள் செல்வ நிலைக்கு ஏற்றவனல்ல என்று மறுத்தாலும் மறுப்பார்கள். ஆதலால் இவளே ஒருவரும் அறியாமல் உடனழைத்துக் கொண்டு நின் ஊர் சென்று மணம் புரிந்து கொள்வாயாக ' என்று தோழி வழி சொல்லிக் கொடுக்கிருள். தலைவன் அவள் கூறுவது தக்கதென்று எண்ணி இசைகிருன். இரு காதற் பறவைகளும் பறந்து போய் விடுகின்றன. அவ்விரு காதலரும் போனபிறகு வீட்டாருக்கு உண்மை விளங்குகிறது. "ஐயோ! முன்பே தெரிங் திருந்தால் அவனுக்கே இவளேக் கல்யாணம் செய்து கொடுத்திருப்பேனே !' என்று தாய் வருந்துகிருள். தோழி ஒன்றும் அறியாதவள்போல அந்தச் சோக நாடகத்தைப் பார்த்துக்கொண் டிருக்கிருள். போன காதலர்கள் மணம் செய்து கொண்டார் கள், இனிமேல் நம்மைப் பிரிப்பவர்கள் யார் இருக் கிருர்கள் ? மறைவாக நிகழ்ந்த நம் காதலை அக்கினி பகவானுக்கு முன்னே உலகறியும்படி செய்து விட்டோம். இனி, என்னுடைய ஊருக்கு நாம் தம்பதிகளாகப் போய் வருவோம். என்மேல்