பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மான் உண்டு எஞ்சிய நீர் 33 இருந்த கோபமெல்லாம் இப்போது என் பெற்ருேர் களுக்கு ஆறியிருக்கும்” என்று தன் மனைவி கூறும் போது, அவன் தடுப்பான, என்ன ? புறப்பட்டு விடுகிருன், உரிமையுள்ள கணவனக. 杀 - 来源 来 米 பிறந்தகத்துக்கு வந்தபோது அந்த மடமகள் எதிர்பாராத ஆச்சரியங்களைக் காண்கிருள். யாராவது அவர்களுடைய கல்யாணத்தைப் பற்றி முணு முணுக்க வேண்டுமே எல்லோரும் முகமலர்ச்சியுடன் இணேமலர் மாலேபோன்ற அவ்விரண்டு அழகுருவி னரையும் அன்புடன் வரவேற்று உபசரிக்கின்றனர். தோழிதான் எல்லோரையும்விட அதிக இன்பத்தை அடைகிருள். இந்தமாதிரி, கணவனும் மனேவியுமாகக் கண்குளிர அவர்களேக் காணவேண்டுமென்று அவள் ஏங்கிக் கிடந்தது அவளுக்குத்தானே தெரியும் ? இல்லற வாழ்க்கையிலே புகுந்த தலைவியைத் தனியே கண்டு தோழி பேசிக் களிக்கிருள். - தன் சொந்த ஊரிலே அந்தக் காதற் பாவை ஓர் அரசிபோல வாழ்ந்தவள். செல்வம் நிரம்பிய வீட்டில் வளர்ந்தவள். ஒன்ருலும் குறைவு தோன்ருதபடி போற்றி வளர்க்கப் பெற்றவள். அவள் தன் காதல னுடன் வேற்றுாரில் எங்ங்னம் வாழ்க்கை கடத்து வாள் ?-தோழிக்கு இந்தக் கவலே எழுந்தது. தலைவ னுடைய ஊர் தண்ணிர் இல்லாக் காடென்று கேள்வி யுற்றிருக்கிருள். ஆகவே, அவள் பேச்சிடையே மெல்ல, "நீ சென்ற ஊரில் நல்ல தண்ணீர் இல்லை. என்கிருர்களே ! நீ எப்படி நுகர்ந்தாய் ' என்று கேட்கிருள். தலைவி அவள் கேட்ட கேள்வியைக் கேட்டு ஆச்சரியப்படுகிருள். "என்ன, இப்படிச் சொல்லு, கிருய் தர்கம் எடுத்த போதெல்லாம் பாலக் குடிப்பவளாயிற்றே என்று நினைத்துச் சொல்லு கிருயோ ? என்னுடைய காவின் வறட்சியைப் போக்க இனிய தண்ணிர் இங்கே இருக்கிறது: காவி, 5 -