பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 - காவியமும் ஒவியமும் ஆனல் என் உயிரின் வறட்சியைப் போக்கும் அன்பு நீர் பொங்கும் இடமல்லவா அந்த ஊர் : நம்முடைய ஊரில் தேளுேடு கலந்த பாலச் சாப்பிட்டுக்கொண்டு பொழுது போக்குவதைவிட, அவர் ஊரில் கலங்கிய நீரை உண்டு வாழ்வதுதான் எனக்கு இனிது ' என்ன? கலங்கிய நீரா? அதுதான் அங்கே கிடைக்குமா ?” 'நல்ல நீர் கிடைக்கிறதோ இல்லையோ ; அது வேறு. நல்ல நீர் கிடைக்காமல் கலங்கிய நீர் கிடைப் பதாயிருந்தாலும் அதுதான் இனிது. தழைகள் நிரம்பிய சிறு பள்ளத்திலே மான்கள் உண்டு எஞ்சி யிருக்கிறதே, அந்தக் கலங்கல் ரோக இருந்தாலும் அதை அருந்துவதை வெறுக்க மாட்டேன். அதுதான் இனிது. தோழி! அதை உண்ணும் பொழுதெல்லாம், அது என் உயிர்க் காதலருடைய நாட்டு நீரென்ற பெருமிதம் எனக்குத் தெளிவை உண்டாக்குகிறது. உள்ளம் மகிழ்ச்சி பொங்க கிற்கையில் இந்த நீரின் கலக்கம் என்ன செய்யும்: - "இங்கேயோ, அவரை அடையாமல் உள்ளம் கலங்கிக் கிடக்கும்போது, தேனும் பாலும் கலந்து. தந்தாலும் அது எப்படி எனக்கு இன்பத்தைத் தரும்?" தோழி உண்மையை உணர்கிருள். மானுண்டு எஞ்சிய கலிழி நீரை இனிதாகப் பண்ணுவது காத லனது அன்பு என்பதைக் கண்டுகொள்கிருள். . தலைவன் கூற்று . அன்னய் வாழிவேண் டன்னைநம் படப்பைத் தேன்மயங்கு பாலினும் இனிய, அவர்நாட்டு உவலைக் கூவற் கீழ - மானுண் டெஞ்சிய கலிழி நீரே. . - -ஐங்குறு நூறு - கபிலர் பாட்டு. (அன்னையென்றது தோழியை. வாழவேண்டு வாழ்வாயாக! நான் சொல்வதை விரும்பிக் கேட்பாயாக. படப்பை - ஊர்ப்பக்கம். மயங்கு - கலந்த உவலைக் கூவம் கிமு தழை நிரம்பிய பள்ளத்தின் கீழே உள்ள. எஞ்சிய கவிழி நீர்-மிஞ்சி நிற்கும் கலங்கல் தண்ணீர்.) .