பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெளன நாடகம் ஆணும் பெண்ணும் கூடி வாழும் இல்லற வாழ்க்கையில் பெண்ணுக்குத்தான் வீடென்னும் கூடு கட்டிக் கிளியைப்போலப் பாதுகாத்து வைத் திருப்பார்கள். ஆடவனும் அந்தக் கூட்டில் அடை பட்டுக் கிடந்தால் பிறகு ஆடவனுக்கு என்ன பெருமை அவனுக்குரிய முயற்சிகள் இல்லேயா ? இல்லறத் தேரை ஒட்டும் பொறுப்பு அவனுடைய தாயிற்றே. அதற்குப் பொருள் வேண்டாமா ? ஆள் வினேயினுல்தான் மனிதன் ஆடவனகிருன். அவனுடைய முயற்சியின் பலமே உலகத்தில் இயக் கத்தை உண்டுபண்ணுகிறது. காதல் இன்பத்திலே ஊறி நிற்கும்பொழுது அவனுடைய உள்ளமும் உடலும் ஒய்வு பெறுகின்றன ; புது முறுக்கை அடை கின்றன. அந்த அமைதியிலிருந்து மீட்டும் அவன் முயற்சியின்மேற் பாய்கிருன். உலகத்தின் பரங்த வெளியிலே புகுந்து தொழில் செய்து பொருளிட்டு கிருன். - பொருள் குவித்து அறம் செய்கிருன் ; இன்பம் நுகர்கிருன். பருவகாலங்கள் ஒன்றன்பின் ஒன்ருக வந்து போவதுபோல முயற்சியும் அதன் பயனும் நுகரும் நுகர்ச்சியும் மாறி மாறி ஆடவனது வாழ்க் கையை அளங்து வருகின்றன. பெண் மகள் இந்த முயற்சியின் பெருமையை உணர்கிருளா ? தன் ஆருயிர்க் காதலனைப் பிரியச் செய்யும் பொருள் முயற்சியை அவள் வெறுக்கிருள். பொருளைக் காட்டிலும் இன்பம் பெரிதென்று கினேக்க வில்லை. அவளும் அறிவுடையவள்தானே ? பொருள்