பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 காவியமும் ஒவியமும் வளம் இருந்தால்தான் இன்பம் சுரக்குமென்பது அவளுக்குத் தெரியாதா என்ன ? ஆலுைம் அந்தப் பொருளே ஈட்டும்பொருட்டுத் தன் காதலன் பிரிவா னென்பன்த அறியும்போது அவள் எல்லாவற்றையும் மறந்துவிடுகிருள். அவளைப் பிரிந்து உயிர் வாழ்வது எப்படி ?’ என்ற ஏக்கம் அவனேடிப் பற்றிக் கொள் கிறது. அவனுடைய கட்சியை எடுத்துப் பேச ஒரு தோழி இருக்கிருள். அவள் என்ன என்ன காரணமோ சொல்லி, காதலன் இப்பொழுது பிரிவது இன்றி யமையாததென்று வற்புறுத்துகிருள். அதெல்லாம் சரி. உணர்ச்சி மிகுந்த இடத்தில், காதலன் பிரிவில்ை அறிவு மயங்கி வீழ்ந்த இடத்தில், இந்தக் காரணங்க ளெல்லாம் ஏறுமா ? காதலி பெரிய யோசனையில் ஆழ்கிருள். "அவர் பொருள் தேடிவர எண்ணுகிருர். இல் லறம் நடத்தும் சுமையை வகிக்கவேண்டி யிருப்ப தால் அவர் முயற்சியை நீ ஆதரிக்க வேண்டும்' என்கிருள் தோழி. 'ஹ-சம் p 'அவர் பொருள் ஈட்டும் பொருட்டுப் போய் விரைவில் மீண்டு விடுவார். நீ அவரைப் போய் வா என்று சொல்லவேண்டும்.” . . . - விஷயத்தைக் கேட்கும்போதே பாதி உயிர் போய்விடும்போல் இருக்கிறது, அந்த மெல்லியலுக்கு. அவள் தைரியமாக நின்று, 'போய்வா' என்று சொல்ல வேண்டுமாம் ! காதலனைப் போய்வா என்று சொல்வதற்கும், யமதர்ம ராஜனே, "என் உயிர் கொள்ள வா' என்று அழைப்பதற்கும் வித்தியாசம் அவள் அளவில் ஒன்றும் இல்லை. o 'போகக்கூடாது' என்று சொல்லலாமா ? சே, அது தவறு. காதலர் தம் இருவருடைய இன்ப வாழ்க்கையும். முட்டின்றி நடை பெறுவதற்கு