பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெளன நாடகம் 37 வேண்டிய பொருளேத்தானே தேடச் செல்கிருர் : போகக் கூடாதென்று தடுப்பது நியாயம் அன்று. அவர் பிரிந்து போனல் அதல்ை வரும் துன்பங்தான் என்ன ?-- wo- - காதலியின் மனம் சுழல்கிறது. அவள் தன் தோள்வளேகளைப் பார்க்கிருள். அது சம்பந்தமாக யோசனை படர்கிறது. இப்போது தன் தோளோடு செறிந்து கிடக்கும் அந்தத் தொடி அவர் பிரிந்து நீங்கினல் உடனே கழன்று தோளினின்றும் நீங்கி விடுமே ! + ஏன் ? அவள் இப்போது அந்த வளைகளைத் தாங்கி கிற்கும் தன் தோளைப் பார்க்கிருள். அவருடைய அணைப்பிலே இன்பங்கண்டு பூரித்த இந்தத் தோள்கள் என்ன ஆகும் தம்மைக் கருது வாரின்றி மெலிந்து போகும். தோள் மெலியவே தொடி கழன்றுவிடுமே ! - - என்ன செய்வது ? தோளேயும் தொடியையும் மாறி மாறிப் பார்க் கிருள். காதலன் போகாமல் இருப்பது முறையன்று. அவன் பிரிந்தால் அவள் மெலிந்துபோவாள். காதலன். போகவேண்டும் ; அவள் தோளும் மெலியாமல் இருக்கவேண்டும். இதற்கு வழியுண்டா ? ஆம். ஏன் இப்படிச் செய்யக்கூடாது? இதில் என்ன தவறு ? அவர் போகட்டும் ; காமும் அவருடன் போவோமே !-இந்த எண்ணம் தோன்றியதோ இல்லையோ, உடனே காதலி தன் பாதங்களைப் பார்க் கிருள். - அவள் தன் காதலனுடன் போவதாக இருந்தால் அந்தத் துணிகரமான செயலே ஏற்றுக் கொள்ள வேண்டியது கால்களினுடைய பொறுப்பு. அவை, கடந்து தன் தோள் மெலிவையும் தொடி கழல்வ