பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறு குழலோசை தோழி: ஆடவர் தம்முடைய கடமைகளைச் செய்வதற்குப் பிரிவதும் அவர் பிரிந்த காலத்தில் காதலிமார் பிரிவுத் துன்பத்தைச் சகித்திருப்பதும் உலக வழக்கம். உன்னுடைய கணவர், மேலும் மேலும் இல்லறம் சிறந்து நடக்கவேண்டுமென்ற எண்ணத்தால் பொருள் ஈட்டத் துணிந்தார். பொருள் ஈட்டுவதற்குச் சில காலம் உன்னைப் பிரிந்திருக்க வேண்டுமே என்ற துயரம் அவருக்கும் உண்டு. ஆனலும் கடமை உணர்ச்சியும் உன்னுடைய திறமை யிலே நம்பிக்கையும் உடையவராகையில்ை அவர் தம்முடைய முயற்சியை மேற்கொண்டார். திருட்டுத் தனமாகப் போகவில்லை. உன்னிடம் சொல்லிக் கொண்டுதானே பிரிந்தார் ? தலைவி: சொல்கின்ற பேச்சிலுள்ள கியாயம் நன்ருகப் புலப்படுகிறது. என்னுடைட புத்தி இன்னும் பல சமாதானங்களேத் தெரிந்து கொண்டே இருக்கிறது. ஆனல்......' - தோழி: அதுதான் சொல்லுகிறேன். உன் னுடைய அறிவில்ை நீயே சமாதானம் செய்து கொண்டு ஆறுதல் அடைந்திருக்க வேண்டும். ஒருவர் சொல்லி ஆறுதல் அடைவதென்பது கடவாத காரியம். அவருடைய அன்பு உனக்குத் தெரியாதா ? உன்னைக் காட்டிலும், அதிகமாக மற்ருெருவருக்குத் தெரியப் போகிறதா ?, ஆகையால் அவர் மேற்கொண்ட முயற்சி வெற்றியுற வேண்டுமென்ற வேண்டுகோ ளோடு நீ சகித்து இருந்தால் உனக்கு எவ்வளவோ ல்லது. - -