பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 - காவியமும் ஒவியமும் தலைவி: அவர் கடமையில் எனக்கும் பங்கு உண்டென்பதை நான் நன்கு உணர்கிறேன். அவர் போன காரியத்தால் விளையும் பயனிற் பெரும்பாலும் எனக்கு நன்மை பயப்பதென்பதையும் தெரிந்து கொண்டிருக்கிறேன். அது மட்டுமன்று நம்முடைய இல்லற வாழ்க்கையில் பொருள் இல்லாவிட்டால் அறமும் இல்லே, இன்பமும் இல்லேயென்று அவர் அறிவுறுத்திச் சென்ருரே ; அந்த வார்த்தைகளே நன்முகத் தெளிந்தே நான் விடைகொடுத்தேன். இவ்வளவும் அறிவின் செயல். ஆல்ை...! தோழி: அறிவுக்கு மிஞ்சி என்ன இருக் கிறது ? ஆனால், ஆனல் என்று சொல்கிருயே ; அந்த ஆளுலென்பது என்னவென்று சொல்லிவிடு. தலைவி: அதைச் சொல்வதற்குள் நீ ஆயிரம் கேள்விகள் கேட்கிருய் தடை சொல்கிருய், உபதேசம் செய்கிருய். தோழி: இதோ, பார்: நான் வாயை மூடிக் கொள்கிறேன். நீ அந்த ஆல்ை விடுகதையை விடுவி, பார்க்கலாம். தலைவி. என் அறிவு என் தலைவருடைய முயற்சிக்கு அரண் செய்கிறது. ஆனல் என்னுடைய உள்ளத்திலே, காரணமில்லாமல் தோன்றுகிற உணர்ச்சி இருக்கிறதே, அதுதான் என்னே அறிவற்ற வளாக்குகிறது; பேதைப் பெண்ணுகச் செய்து விடுகிறது. அறிவு, நியாயங்களே ஆராய்ந்து வரும் போது அந்த உணர்ச்சி கீழறுத்துக்கொண்டே வருகிறது. - தோழி: சொல்வது எனக்கு விளங்கவில்லை. தலைவி: உனக்கு விளங்காது; எனக்கே விளங்கவில்லை. உன்னுடைய அறிவுக்குத் தோன்று கிற காரணங்களும் நியாயங்களும் எனக்கும் தோன்றுகின்றனவென்று ச்ொன்னேனல்லவா ? அந்த நிலையில் கான் அறிவுடையவள்தான். ஆனால், அந்த்