பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறு குழலோசை - 41 அறிவையும் ஏமாற்றிவிட்டு எந்தமாதிரி அடக்கப் பார்த்தாலும் அடங்காமல் உள்ளத்தின் அடியிலே துள்ளி எழுகிற உணர்ச்சி - அதைத் துன்பமென்று சொல்வதா ? இன்பமென்று சொல்வதா ? ஒன்றுமே தெரியவில்லை. - அங்த உணர்ச்சிதான் என்னேப் பேதை ஆக்குகிறது. இதோ பார்: அன்று இந்த அழகான மாலைக் காலத்தை எவ்வளவு மகிழ்ச்சியோடு எதிர்பார்த்து நிற்பேன் இப்பொழுது மாலைக்காலம் ஏன் வருகிறதென்று பயமுண்டாகிறது. சூரியன் மலை வாயில் விழுந்திருக்கிருன். வானமண்டலம் முழுவதும் செக்கச் செவேலென்றிருக்கிறது. முன்பெல்லாம் இதைக் கண்டால் என் உடம்பிலே ஒரு ஜீவசக்தி உண்டாகிவிடும். இப்போதோ ரத்தக்குழம்பைக் கண்டாற்போலல்லவோ தோற்றுகிறது ? இந்தப் புல்லிய மாலே...... ஆ (திடீரென்று காதைப் பொத்திக்கொள்கிருள்.) தோழி: (திடுக்கிட்டு) என்ன இது? ஏன் இப்படி நடுங்குகிருய் ? ஏன் காதைப் பொத்திக் கொள்கிருய் ? - தலைவி: (பின்னும் இறுகக் காதைப் பொத்திக் கொள்கிருள்.) - தோழி: என்ன இப்படி திக்பிரமை பிடித்த வள்போல் இருக்கிருயே சொல். எனக்குப் பயமாக இருக்கிறது. ஏன் இப்படிச் செய்கிருய் சொல், சொல். - தலைவி: உனக்குக் கேட்கிறதா ? தோழி: என்ன ? தலைவி. என் காதில் வேல் பாய்ந்ததே, ே உணரவில்லைய்ா ? - - தோழி: வேலாவது, வாளாவது பைத்தியம் பிடித்துவிட்டதா ? காவி. 6