பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 காவியமும் ஒவியமும் தலைவி: இன்னும் கேட்கிறதா ? தோழி: எனக்கு ஒன்றும் கேட்கவில்லே. உன் னுடைய கலங்கிய வார்த்தைகளேத்தான் கேட் கிறேன். - தலைவி. கேட்கவில்லையா ? உற்றுக் கேள். தோழி: ஒன்றும் கேட்கவில்லையே (கவனிக் கிருள்.) கடுங்கும்படியான இடியோசை ஒன்றும் காணவில்லேயே ! அதற்கு மாருக மதுரமான ஒசை யொன்று கேட்கிறது. - தலைவி: கவனித்துப் பார்த்துச் சொல். தோழி: மாலே வந்துவிட்டது. பசுக்களை மேய்க்கக் கொண்டுபோன இடையன் மேய்த்து விட்டுத் திரும்பி ஒட்டி வருகிருன் வரும்போது ஊதுகிற புல்லாங்குழல் ஓசை எவ்வளவு இனிமை யாக விழுகிறது. இதோ, மிகவும் தெளிவாகக் கேட் கிறதே வேறு ஒன்றும் கேட்கவில்லையே ! தலைவி. அதைத்தான் சொல்கிறேன். அது என் காதில் இனிமையாக விழவில்லையே. வேலைக் கொண்டு எறிவது போல இருக்கிறதே. புல்லாங் குழலோசை அது, கேட்பதற்கு இனிமையானது, இடையன் ஊதுகிருன் என்ற விஷயங்கள் எனக்குத் தெரிகின்றன. ஆனால் அந்தக் குழலோசையின் மதுரத்தைக் கேட்க எனக்குக் காதில்லை. அது செவிவழியே பாய்ந்து உள்ளத்தில் வேல்போல் ஊடு ருவிச் செல்கிறது. ஆயன் திரும்பி வீட்டுக்கு வரு கிருன்; மாடுகள் வயிருர மேய்ந்து வருகின்றன. உலகமே மாலைக் காலத்தில் தன்னுடைய சொந்த வீட்டுக்கு மீள்கிறது. என்னுடைய காதலரோ இன்னும் மீண்டுவரவில்லே ; மீண்டு வருபுவர்களுக்கு' அல்லவா புல்லாங்குழற் கீதம் இனிக்கும் ? எனக்கு, மீட்சி நிறைந்த் உலகத்தில் என் தனிமையைத்தான் எடுத்துக்காட்டுகிறது. தோழி! நான் என் செய்வேன்!