பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறு குழலோசை 43 தோழி: (தனக்குள்) காமமயக்கத்தின் விசித் திரந்தான் எவ்வளவு விநோதமாயிருக்கிறது! இனிய பொருளிலே இன்னமையைக் காணும் காதலின் தத்துவம், உணர்ந்தவர்களுக்கே விளங்கும். - தலைவி கூற்று தேரோன் மலைமறைந்த செக்கர்கொள் புன்மாலை ஆாான்பின் ஆயன் உவந்து தும் - சீர்சால் சிறுகுழல் ஒசை செறிதொடி, வேல்கொண் டெறிவது போலும் எனக்கு. - -ஐந்திணை ஐம்பது - மாறன் பொறையனர் பாட்டு. (தேரோன் - தேரையுடைய சூரியன், செக்கர் - செவ்வானம். புன்மாலே - பொலிவழிந்த மாலேக்காலம். ஆர் ஆன் பின் - அரிய பசுக்களின் பின்னலே. ஆயன் - இடையன். செறி தொடி - இறுகிய வளைகளே அணிந்த தோழியே. எறிவது - குத்துவது.)