பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேயும் உயிர் அழகிய ஓடை ; மலையடிவாரத்தில் இருபுறத் திலும் உள்ள பாறைகளில் மோதும் அலேகள், மெல்ல மெல்ல ஓரங்களில் ஒதுங்கி வரும் மலர்கள், தளிர்கள், இடை இடையே அருவியே பூத்தது போன்ற சிறுசிறு நுரைத் தொகுதிகள். முதல் நாள் தான் மழை பெய்தது. அதற்ை புதுவெள்ளம் வங் திருக்கிறது. நுரையும் நுங்குமாக அருவியின் புதுமைக்கோலம் விளங்குகின்றது. ஒரு சிறு நுரை. அதன் ஜன்மஸ்தானம் எதுவோ தெரியவில்லை. கரையோரத்தில் மெல்ல மெல்ல வரும் போதே அங்கேயுள்ள சிறு கற்களின்மேல் அது மோதுகின்றது. ஒரு தடவை மோதினவுடன் அதி லிருந்து ஒரு பகுதி கரைந்துவிடுகிறது. அப்புறம் சிறிது தூரம் மெல்ல மெல்ல அருவியின் போக்கிலே கலக்கிறது. மீண்டும் கரையோரத்தில் உள்ள பாறை யில் மோதிச் சுழலுகிறது. அந்தச் சுழற்சியிலே அதன் உருவம் பின்னும் சிறுத்துவிடுகின்றது. இப்படி வரவர அது தேய்ந்து உருமாறி வருகின்றது. என்ன வியப்பு 1 சிறிது நேரத்திற்கு முன்னே கண்ட அந்த நுரை எங்கே இப்போது அதைக் காணுேமே அந்தச் சிறு நுரை அருவிக் கரையி லுள்ள கற்களில் மோதிமோதி மெல்ல மெல்லத் தேய்ந்து இப்பொழுது இல்லையாயிற்று. 来源 亲 来 来 ஒரு புலவன் இந்தக் காட்சியிலே உள்ளத்தை இழந்துவிடுகிருன். உலக வாழ்க்கையாகிய அருவி யிலே எத்தனை உயிர்களாகிய நுர்ைகள் வேதனைக் கற்களில் மோதி மோதித் தேய்கின்றன அந்த நினை வைத் தான் கண்ட காட்சியோடு அவன் பொருத்திப் பார்க்கிருன்.