பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேயும் உயிர் 45 புறத்தே கண்ட ஈசுவர சிருஷ்டியை உபமானமாக வைத்து அப்பெரும்புலவன் அகத்தே ஒரு ஜீவ சித்தி ரத்தைச் சிருஷ்டிக்கிருன். உயிர் ஒன்று உடல் இரண்டாக வாழ்ந்த காதலர் களில், காதலன் காதலியைச் சிலகாலம் பிரிய நேர் கிறது. அவள் பிரிவெனும் கொடுந்தியினல் வெம்பு கிருள். முன்பு இன்ப மயமாக இருந்த உலக முழு வதும் அவளுக்கு இப்பொழுது முள்ளடர்ந்த காடாக இருக்கிறது. அவளுடைய கிலே, மலரினும் மெல்லிய காதலின் தன்மை முதலியவற்றின் உண்மையை வெளியில் உள்ளார் எப்படி அறியக்கூடும் ? அவளுடைய உயிர்த் தோழியே அறியவில்லை. 'உலகத்திலே கணவன் மனைவி யென்று இருங் தால் பிரியாமலும் வேறு ஊருக்குப் போகாமலும் இருப்பார்களா? உன்னுடைய ஆசையை அடக்கிக் கொள்ளக்கூடாதா?’ என்று அவள் கேட்கிருள். காதலின் சக்தியை அவள் அறிந்துகொள்ள வில்லை என்பதைத் தலைவி உணர்கின்ருள்; இப் படியும் வன்னெஞ்சக்காரர்கள் இருப்பார்களா ? காதலே அடக்குவதாவது ' என்று எண்ணுகிருள். காதல் உயிரோடு பிணைக்கப்பட்டதாயிற்றே : அதை விரிப்பதும், சுருக்குவதும் எப்படி ? அவளுடைய கெஞ்சத்தில் பிரிவால் உண்டான துன்பத்தோடு, மன மறிந்த தோழிகடத் தன் நிலையை அறியாமல் இப் படிச் சொல்லும் கொடுமையும் கலந்து வேதனையை மிகுவிக்கிறது. - - தோழிக்குப் பதில் சொல்ல விரும்பினள். ஆனல் அந்தக் கல்கெஞ்சக்காரியினுடைய முகத் தைப் பார்த்துப் பேசுவதற்கு அவள் மனம் பொருந்த வில்லை. யாரையோ பார்த்துச் சொல்லுவதுபோலச் சொல்ல ஆரம்பிக்கிருள் : "காதலைத் தடுத்து அடக்குவாயென்று சொல் கிருர்களே, அவர்களுக்கு அந்தக் காதலைப்பற்றி