பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை. சீதாபிராட்டியை ராமபிரான் முதல்முதல் காணும் பொழுது அப்பிராட்டியை வருணிக்கப் புகுந்த கம்பன் அந்த அழகுப் பிழம்புக்கு உவமையாக என்ன என்ன பொருள்களையோ சொல்லிப் பார்க்கிருன். பொன்னின் சோதியையும் பூவினது நறுமணத்தையும் தேனினது சுவையையும் சொல்கிருன். திருப்தி உண்டாகவில்லை. முடிந்த முடிபாக உயர்ந்த பொருள் ஒன்றைச் சொன்னல் தான் அவனுடைய பாட்டு, பொருளுடையதாகுமென்று தோன்றுகின்றது. கடைசியில் ஒன்றைச் சொல் லியே விட்டான் : 'செஞ்சொற் கவி இன்பம்!" என் கிருன். புலன்களால் நுகரும் இன்பத்தை உதவும் எனேய பொருள்களைக் காட்டிலும் நேரே உள்ளத்தால் நுகர்ந்து இன்புறும் கவிதை, போகப் பொருள்களிலெல்லாம் தலை சிறந்தது. மதுகலசத்தையும் பெண்ணணங்கையும் இன்ப வாழ்க்கைக்கு உறுதுணேயாக வேண்டும் உமர் கையாமும், காணி நிலமும் பத்துப் பன்னிரண்டு தென்னமரமும் பத்தினிப் பெண்ணும் வேண்டுகின்ற பாரதியும் அவ்வின்பப் பொருள்களை இன்பமுடையனவாக ஆக்கக் கவிதையையும் வேண்டுகின்ருர்கள். கவிதைதான் இன்ப வாழ்க்கைக்கு உயிர். மக்கள் தங்களுக்கு எந்த எந்தப் பொருள்களால் இன்பம் கிடைக்கும் என்று எண்ணிப் பெருமுயற்சி செய்கி ருர்களோ அந்தப் பொருள்கள் சில சமயங்களில் தெவிட்டி விடும். மது கலசத்தை விரும்பாத சமயமும் உண்டு; மங்கை யின்பம் சலிக்கும் பொழுதும் உண்டு. இன்ப வாழ்க்கையி னிடையே இந்தச் சலிப்பு ஒரு கணம் இருந்தாலும் இடை யறவுபட்டு விடும். பிறகு அது இன்ப வாழ்க்கை ஆகாது. ஆதலால் இடையறவுபடாத இன்பத்தை உண்டாக்க ஒரு பொருள் வேண்டும். அதுதான் கவிதை. மது நுகர்ச்சியால் வரும் இன்பம் உள்ள பொழுதிலும் அந்த இன்பத்தை மிகுவிக்கக் கவிதை உதவுகின்றது. பெண்ணினிமையை உணரும் செவ்வியிலும் கவிதை அவ் வினிமையை ஒன்று பத்தாகப் பெருக்குகின்றது. எல்லா