பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேஞ்சமும் அறிவும் 53 அந்தத் தண்ணிய திங்களின் வெள்ளொளி அவ னுக்கு இன்பத்தை உண்டாக்கவில்லை. அவன் மனத்தை எத்தனையோ காததுாரத்திற்கு அப்பால் கொண்டுபோய் விட்டது. இயற்கையின் அழகைப் புறக்கண்களால் கண்டு அநுபவிக்க அவல்ை இயல வில்லே; அவன் அகத்தே, தன் உள்ளத்தைப் பறித்த பேரழகு துளும்பும் ஓர் உருவத்தைக் காண்கிருன். என்ன அழகு! கூந்தல் 1 முதுகுப் புறத்திலே நீண்டு தாழ்ந்த கூந்தல் ; தாழ்ந்து இருண்ட கூந்தல். கண்கள் மையுண்ட கண்கள் 1 அந்தக் கண்களின் பொலிவிலே சோபிக்கின்ற இதழ்கள் ; காதல் மயக் கத்தை உண்டாக்குவதற்குப் போதியபடி சிறிது திறக் திருக்கின்றன, போதின் நிறம்பெறும் ஈரிதழ் போலே; மலரும் பருவத்திலுள்ள போதுதான். இங்த இரண்டும் அவன் உள்ளத்தைப் பிணித்து விட்டன. அவனுடைய காதலி இந்த இரண்டின. அலும் அவன் மிடுக்குடைய உள்ளத்தைக் குவிய வைத்துவிட்டாள். * - - அவளேப் பிரிந்து இங்கே தனித்து இருக்கிருன். உடல்தான் இங்கே இருக்கிறது; உள்ளத்தை அவள் பிணித்துக்கொண்டாள். இப்போது இந்த நிலவொளி யினலே சக்தி யூட்டப்பெற்ற நெஞ்சம் சொல்கிறது : "என் இங்கே தனியாகக் கிடந்து அவஸ்தைப் படுகிருய் ? நம்முடைய துன்பத்தைப் போக்கிக் கொள்ளலாம்; வா, போவோம்" என்று அந்தப் பற்றுள்ளம் தூண்டுகிறது. அதன் துண்டுதலுக்கு உட்பட்டுக் காதலுலகத்திலே சஞ்சாரம் செய்கிருன், அந்தக் காதலன். அவன் மனம் படும் பாடு சொல்லத் தரமன்று. கண்கள் ஸ்வாதீனத்திற்கு வருகின்றன. தலையைக் கீழே தாழ்த்திப் பார்க்கிருன் கூடாரமும் பாசறை யும் அவன் கிலேயை அவனுக்கு எடுத்துக் காட்டு கின்றன. காதலியைப் பிரிந்து படையிற் சேர்ந்து தன் கடமையைச் செய்து ஊதியம் பெற்றுச் செல்ல