பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 காவியமும் ஒவியமும் வந்திருக்கிருன் அவன். வீட்டிலே சமாதான காலத் திலே காதலியோடு இருக்கும்போது அவன் காதலன். அரசன் படையில் ஒரு தலைவய்ைப் போர் செய்ய வந்திருக்கும்போதோ வீரனுக இருக்கிருன். காதலியிடம் சிறைப்பட்ட நெஞ்சத்தின் உப தேசம் சிறிது மறைகிறது. அப்போது அறிவு தலைக் காட்டுகிறது. "அட பைத்தியமே ! நீ யார் ? படைத் தலைவன் அல்லவா ? பகைவர்களேப் புறங்காட்டி ஒடச் செய்யும் மகா வீரனல்லவா ? நீ ஏற்றுக் கொண்ட காரியத்தை முடிக்காமல் மறந்துவிடலாமா? அது பேதைமையல்லவா ? பாதியிலே நீ போய் விட்டால் உனக்குப் பழி வங்து கேருமே ! இதை நீ நினைத்துப் பார்க்கவில்லையே? உன் காதல் வீனகவா போகிறது ? இவ்வளவு நாள் பிரிந்திருந்தாய். இன்னும் சிறிது காலம் அவசரப்படாமல் இரு' என்று தக்க காரணங்களுடன் அவனுக்கு உபதேசம் செய்கிறது. - ஒரு பக்கம் காதலியின்பால் காதல் பூண்டு சிறைப்பட்ட நெஞ்சமும், ஒரு பக்கம் பேதைமை என்றும் பழி என்றும் கூறித் தன் காதல் வேகத்தைத் தணிக்கும் அறிவும் மாறி மாறிப் போராட, அவன் ஒன்றும் தோன்ருமல் மயங்குகிருன் , தியங்குகிருன் : உருகுகிருன் , மறுகுகிருன். உடம்பு மெலிவது போலத் தோற்றுகிறது. இந்தப் போராட்டத்தில் தான் மாலேயிற் கண்ட யானே விளையாட்டு அவனுடைய ஞாபகத்திற்கு வரு கிறது. களிறுகள் இரண்டு தம்முள் மாறுமாருகப் பற்றிய தேய்புரிப் பழங் கயிற்றை நினைத்துப் பார்க் கிருன் , 'நானும் அப்படித்தான் இருக்கிறேன். என் உயிர்க் காதலியின்பால் வைத்த நெஞ்சம் ஒரு பக்கம் இழுக்கிறது ; அறிவு மற்ருெரு பக்கம் இழுக்கிறது. கடுவில் அகப்பட்டுக்கொண்டு என் உடம்பு உருகு கிறது' என்கிருன்.