பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சமும் அறிவும் 55 இந்தச் சித்திரத்தை அந்த வீரக் காதலனது கூற்ருகப் பின்கண்ட சங்கச் செய்யுள் காட்டுகிறது. - தலைவன் கூற்று - - புறந்தாழ் பிருண்ட கூந்தற் போதின் நிறம்பெறும் ஈரிதழ் பொலிந்த உண்கண் உள்ளம் பிணிக்கொண் டோள்வயின் நெஞ்சம் செல்லல் தீர்கம் செல்வாம் என்னும் ; செய்வினை முடியா தெவ்வஞ் செய்தல் எய்யா மையோ டிளிவுதலைத் தருமென உறுதி தாக்கத் தாங்கி அறிவே சிறிதுநனி விரையல் என்னும்; ஆயிடை ஒளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய தேய்புரிப் பழங்கயிறு போல வீவது கொல்லென் வருந்திய வுடம்பே. . . . -நற்றிணை - தேய்புரிப் பழங்கயிற்றினர் பாட்டு. (முதுகிலே தாழ்ந்து இருண்ட கூந்தலையும், மலரும் பருவத்திலுள்ள மலரின் நிறத்தைப் பெற்ற ஈரமான இமைகள் விளங்கும் மையுண்ட கண்களேயும் உடையவளாய், நம் உள்ளத்தைத் தன்பாற் கட்டுப் படுத்தியவளிடத்தே, துன்பங் தீர்வோம்; போவோம்’ என்று நெஞ்சம் சொல்லும். மேற்கொண்ட காரியத்தை நிறைவேற்ருமல் துன்பம் உண்டாக்குதல் அறியாமையோடு பழியும் தரும் என்று உறுதியை எடுத்துக்காட்டி அறிவானது, சிறிது காலம் அதிக அவசரப்படாமல் இரு என்று சொல்லும். இதற் கிடையே, என் புண்பட்ட உடம்பு, விளங்குகின்ற உயர்ந்த கொம்புகளே யுடைய ஆண் யானைகள் எதிரெதிரே பற்றி இழுக்கும் தேய்ந்த புரிகளேயுடைய பழைய கயிற்றைப்போல அழிவதாகுமோ 11