பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் போன வழி I கிழவி: அந்தப் பாலே நிலங்களிலெல்லாம் எயினர்கள் வாழ்கிருர்கள்; இருந்து வாழவில்லை ; அலேந்து வாழ்கிருர்கள். தலைவி. பாட்டி, அவர்களுக்கு என்ன வேலை ? எப்படி ஜீவிக்கிரு.ர்கள் ? - கிழவி: மற்றவர்கள் மரணத்தை அடைகிருர் கள்; அவர்கள் உயிர் வாழ்கிருர்கள். தலைவி: இரண்டுக்கும் என்ன சம்பந்தம் ? கிழவி: அவர்கள் மரணமடைவதனால் அவர்கள் கொண்டுபோகும் பொருள்களே வெளவிக்கொண்டு இந்த வேடர்கள் ஜீவிக்கிருர்கள். தலைவி: அவர்கள் யார்? கிழவி: அவர்களா? துார தேசத்துக்குப்போய்ப் பண்ம் சம்பாதிக்கலாமென்று போகிறவர்களும், சம்பாதித்த பணத்தோடு வருகிறவர்களும், வியா பாரம் செய்யப் போகிறவர்களுமாக எவ்வளவோ பேர் பாலே நிலத்தில் போகிருர்கள், வருகிருர்கள். அவர்கள் இந்த எயினருக்குப் பயந்து கூட்டமாகப் போவார்கள். தனி மனிதனகப் போனல் அவன் நெடும் பிரயாணத்துக்குத் தயாராக இருக்கவேண்டி யதுதான் ! - தலைவி: அப்படியால்ை அந்தக் கொடிய மனி தர்கள் கொலே செய்வார்களென்ரு சொல்லுகிறீர்கள்? கிழவி: ஆம்; கொலை செய்வதிலேயே அவர் களுக்கு இன்பம். போகிறவர்களிடத்தில் பொருள்