பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் போன வழி 59 தலைவி: (தனக்குள்) அழகையும் அறிவையும் கண்டவள். பேசுகிறதைப் பார் ! கான் எதை கினைத்து வருந்துகிறேன் என்பதைக் கொஞ்சமாவது இந்த ஜடம் யோசித்துப் பார்த்ததா? அவர் பிரிவா என்னே வருத்துகிறது ? அவர் போன வழி, அந்தக் கொடுமை யான பாலே நிலம் - அதை நினைத்தல்லவா என். உள்ளம் குமுறுகிறது ? அந்தப் பாட்டி அன்றைக்குச் சொன்னளே! (வெளிப்படையாக) எறும்பு வளே போன்ற குறிய பல சுனைகளையுடைய உலேக்கல்லேப் போன்ற பாறையின்மேல் ஏறி, வளைந்த வில்லே யுடைய எயினர் தம் அம்புகளைத் தீட்டும் கவர்த்த வழிகளையுடையது அவர் போனவழி என்று சொல்லு கிருர்கள். கவலே கொள்பவர்களைப் போலப் பிர மாதமாக ஆரவாரிக்கும் இந்த ஊர், இதைப்பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல் வேறு என்ன என் னவோ விஷயங்களைச் சொல்லிப் புத்தி கூற வருகிறது ! ஆகா! என்ன அறிவு ! - தலைவி கூற்று எறும்பி அளையிற் குறும்பல் சுனைய உலைக்கல் அன்ன பாறை ஏறிக் கொடுவில் எயினர் பகழி மாய்க்கும் கவலைத் தென்ப அவர்சென்ற ஆறே; அதுமற் றவலங் கொள்ளாது நொதுமற் கழறும்இவ் வழுங்க லூரே. --குறுந்தொகை - ஒதலாந்தையார் பாட்டு, (எறும்பி - எறும்பு. அளேயின் - வளையைப்போல. குறும் பல் சுனேய-குறுகிய பல சுனகளே உடைய. கொடு வில் எயினர் - வளைந்த வில்லையுடைய வேடர். பகழி மாய்க்கும் - அம்பைத் தீட்டும். கவலேத்து - பிணங்கிய வழி களே உடையது. என்ப - என்று சொல்வார்கள், ஆறு வழி. அவலம் - வருதீதம். கொது.மல் - அயலான வார்த்தைகளே. கமுறும் - இடித்துரைக்கும். அழுங்கல் - ஆரவாரம் ஊரென்றது. இங்கே தோழியை.)