பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 காவியமும் ஓவியமும் கிழவி: ஆமாம். வளைந்த வில்லையுடைய எயினர்களின் அம்பு எவ்வளவோ கொலேகளைச் செய்து மழுங்கிப் போகுமல்லவா? அப்போது அந்தப் பாறைதான் சாணக்கல்லாக உபயோகப் படுகிறது. தங்கள் அம்புகளைப் பாறையிலே தீட்டிக் கொள்கிருர்கள். அவர்கள் செய்யும் கொலேத் தொழி லுக்கு அந்தப் பாறை உதவி செய்கிறது. தலைவி: ஐயோ! அதைச் சொல்ல வேண் டாமே ! என் தலை கிறு கிறுக்கிறதே ! 2 தலைவி. (தனக்குள்) ஐயோ! என்ன பாவம் செய்தேனே தெரியவில்லையே! கணமேனும் பிரி யாமல் இருந்த எங்களே விதியும் சம்பிரதாயமும் கடமையும் பிரித்து விட்டனவ்ே. இந்தப் பாழும் பணம் இல்லாவிட்டால் என்ன ? "என் அருமைக் காதலர் அதைத் தேடிக்கொண்டு போயிருக்கிருரே ! பாலைவனத்தின் வழியாகப் போக வேண்டுமாமே! தோழி: (தானே பேசிக்கொள்கிருள், தலைவி யின் காதிற் படும்படி..) உலகத்தில் புருஷர்களாகப் பிறந்தவர்கள் முயற்சியோடு இருக்கவேண்டும். பொருள் சம்பாதிக்க வேண்டும். தாம் ஈட்டிய பொருளை வைத்துக்கொண்டு இல்லற வாழ்க்கை கடத்தவேண்டும்; அதுதான் இன்பவாழ்க்கை.புருஷர் கள் தங்கள் கடமையை முன்னிட்டுக் காதலியரைப் பிரிவது வழக்கங்தான். தலைவி: (தனக்குள்) இவள் என்ன உளறு கிருள் ! புருஷர்களாம், வழக்கமாம் ! (கவனிக்கிருள்.) தோழி: (தலைவியின் கர்திற் படும்படி) காதலர் பிரிந்ததன் கியாயத்தை உணராமல் எப்போதும், ! அவரை நினைத்து ஏங்கிக்கொண் டிருப்பது அழ கன்று அறிவும் அன்று. - . . . . . . .