பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் நிலை நூல் நவின்ற பாக ! இதென்ன புதுமையாக இருக்கிறது ? எஜ மானன் வண்டிக்காரனே ஸ்தோத்திரம் செய்ய வாவது l மாதச் சம்பளம் வாங்கிக்கொண்டு அடிமை யைப்போல உழைக்கும் சாரதிக்கு என்ன பெருமை யப்பா ! - இப்படி இந்தக் காலத்தில் கினேப்பார்கள். ஆனல் இந்த எஜமானன் அப்படி கினைப்பவன் அல்ல. எங்கெங்கே அறிவுத் திறமை இருக்கிறதோ, அங்கங்கே அதற்கு ஏற்ற மதிப்பை அளித்துப் பாராட்டும் உள்ளம் இங்த எஜமானனுக்கு, தலைவ னுக்கு, உண்டு. தேர்ப்பாகனுக்கு அவ்வளவு பெருமை தரவேண்டுவதும் கியாயங்தான். 'நூல்களைப் பயின்ற அறிவுடைய பாகனே' என்று தலைவன் சாரதியை விளிப்பது உயர்வு நவிற்சி யல்ல. அந்தப் பாகனுக்குப் பலவகை நூல்கள் தெரியும். குதிரைகளின் உள்ளங் தெரிந்து பாது காத்து அவை ஏ.வாமலே ஒடும்படி செய்யும் திறமை அவனுக்கு இருக்கிறது. அசுவ சாஸ்திரத்தை அவன் முற்றக் கற்றிருக்கிருன். தான் தேரை ஒட்டிச் செல்லும் இடங்களின் கிலேயும், அவற்றிலே எவ்: வெவ்வாறு தேரை ஓட்டவேண்டுமென்ற அறிவும் அவனுக்கு இருக்கின்றன. பிரயாணிகளிடமிருந்து தெரிந்துகொண்ட செய்திகளும் நேரிலே கண்டு அநுபவித்த செய்திகளும், கில இயல்பைப் பற்றிய நூல்களில்ை உணர்ந்த செய்திகளும் அவனே ஒரு பூகோள சாஸ்திர அறிஞளுக ஆக்கியிருக்கின்றன. அதனால்தான் அவன் வெறும் லகான் பிடிக்கும்