பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 சூடும்ப விளக்கு.


பஃறொடை வெண்பா. 'தன்மகளின்‌ பெண்ணைத்‌ தனிப்பெருமைப்‌ பேர்த்திதனை

இன்ப அமிற்தை இணையற்ற ஓவியத்தைத்‌ தங்கம்‌ எடுத்துத்‌ தலையுச்‌சி தான்மோந்து மங்கா மூழ்ச்சினால்‌ மார்போ டணைத்திருந்தாள்‌;; அங்கந்த வேளையிலே அன்பு மகள்பெற்ற இங்கட்‌ பிறையைச்‌ செழுமணியைப்‌ பேர்த்‌ததனைக்‌ காண மலர்க்குழலும்‌ வந்தாள்‌ கடிஇனிலே! பாட்டிமார்‌ வந்தார்‌ பழம்பாட்டுப்‌ பாடிடூவார்‌ கேட்டு மகிழலாம்‌ என்று இளிப்பேச்சுத்‌: தோழிமார்‌ தாழ்வாரத்‌ தொட்டிலண்டை வந்தமர்ந்தார்‌. உள்ளவர்கள்‌ எல்லாரும்‌ தங்கத்தின்‌ கைப்புறத்தில்‌ உள்ள குழந்தை யுடன்கொஞ்ச முந்துவதைத்‌ தங்கம்‌ அறிந்தாள்‌ தனஇடத்தில்‌ உள்ளஒரு பொங்கும்‌ அமிழ்தைப்‌ பொன்னான தொட்டிலே இட்டாள்‌ நகைமுத்தை இன்னிசையால்‌ தாலாட்ட விட்டாள்‌ விளைந்த தொருபாட்டு. தாயின்‌ தாலாட்டு பொன்னே மணியே புதுமலரே செந்தேனே மின்னே கருவானில்‌ வெண்ணிலவே கண்ணுறங்கு! தன்னே ரிலாத தமிழே தமிழ்ப்பாட்டே அன்னைநான்‌ உன்விழியில்‌ ஐமம்‌ ததும்புவதேன்‌? என்பெற்ற அன்னையார்‌ உன்பாட்டி இன்னவர்கள்‌ உன்தந்தை அன்னை உயர்பாட்டி இன்னவர்கள்‌!. என்னருமைத்‌ தோழிமார்‌ உன்தாய்மார்‌ அல்லரோ? கன்னற்‌ பிழிவே கனிச்சாறே கண்ணுறங்கு! இன்னமலர்க்‌ காலசையச்‌ செங்கை மலர்‌ அசைய உன்கண்‌ உரைப்பதென்ன என்கண்ணே கண்ணுறங்கு। தோழிமார்‌ தாலாட்டு தொகைமுத்துத்‌ தொங்கலிட்ட தொட்டிலிலே அன்பே. நகைமுத்தின்‌ பெண்ணான நன்முத்தே மானே!