பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 சூடும்ப விளக்கு

 

எதுஎனக்‌ இன்பம்‌ நல்கும்‌?
“இருக்கின்றாள்‌” என்ப தொன்றே!
நினைக்கின்றாள்‌.
நினைக்கிறேன்‌ நான்‌!
இனிக்கின்ற தமிழை அன்னாள்‌.
இசைக்கின்ற ஆற்றல்‌ இல்லை.
தனித்துள்ளேன்‌ ஒருபால்‌! அன்னாள்‌
தனித்துள்ளாள்‌ மறுபு றத்தே!
எனைக்கண்டும்‌, என்னைத்‌ தொட்டும்‌.
பயில்கிலாள்‌; எனினும்‌ என்னை
'நினைக்கன்றாள்‌, நினைக்கின்‌ றேன்‌நான்‌;
நிலைக்கின்ற தென்பால்‌ இன்பம்‌!

அன்புள்ளம்‌ காணுகின்றேன்‌'
அகத்தின்பம்‌ காணுகின்றேன்‌
என்பும்நற்‌ றோலும்‌ வற்ற,
ஊன்றுகோல்‌ இழுக்க வீழத்‌,
தன்புது மேனி, காலத்‌:
தாக்னால்‌ குலைய லானான்‌.
என்முது விழிகா ணற்கும்‌
இயலாதே! எனினும்‌ அன்னாள்‌
அன்புள்ளம்‌ காணு இன்றேன்‌।
அகத்தின்பம்‌ காணு இன்றேன்‌!.

பேரர்‌ அம்மாயி என்றழைப்பர்‌
அது கேட்பேன்‌ இன்பம்‌ செய்யும்‌
செம்மா துளைபி எந்து:
இதறிடூம்‌ சிரிப்பால்‌ என்னை
அம்மாது களிக்கச்‌ செய்வாள்‌!
அதுவெலாம்‌ அந்நாள்‌! இந்நாள்‌
அம்மணி நகைப்பும்‌ கேளேன்‌.
ஆயினும்‌ பேரர்‌ ஓர்கால்‌
“அம்மாயி” என்பார்‌! கேட்பேன்‌
அமிழ்தினில்‌ விழும்‌என்‌ நெஞ்சம்‌!