பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருமணம்‌.

81


மணக்குநெய்‌ தடவி வாரிப்பூப்‌ பின்னி மணியிழை மாட்டி,எம்‌ கண்ணாட்‌ டிக்கு.

ஏலும்‌ சேலை எதுவென எண்ணி

நிலாமுகத்‌ இற்கு நீலச்‌ சேலை

நேர்ச்‌ி ஆக்கி நிலைக்கண்‌ ணாடி

பார்க்கச்‌ சொன்னார்‌; பார்த்த நகைமுத்தோ கண்ணா டியில்தனைக்‌ கண்டாள்‌; தன்மனத்‌ துள்நாடி வேடனுக்‌ கொப்பு நோக்கினாள்‌. காலுக்‌ குச்சிராய்‌, மேலுக்குச்‌ சட்டையொடு சேலுக்கு நிகர்விழித்‌ தெரிவை காணத்‌ தொன்னாட்‌ டூச்சேர சோழபாண்‌ டியரில்‌ இந்நாள்‌ ஒருவனோ என்ன நின்றான்‌.

“வருக இருமண மக்கள்‌!*என்று.

இருந்து தமிழப்‌ பெரியார்‌ அழைத்தனர்‌. இருமணப்‌ பந்தலின்‌ இறப்புறு மணவறை, இருமண மக்களை ஏந்தித்‌ தன்னிடை, முழுநில வழகொழுரு முகமும்‌, மற்றும்‌

எழுந்த பரிதிநேர்‌ ஆணழகு முகமும்‌:

இருப்பது காட்டி இறுமாப்‌ புற்றது!

நிறைமண மன்றெலாம்‌ நறுமணம்‌, இன்னிஸ்ச£ அறிஞர்‌ பெண்டிர்‌, ஆடவர்‌ பெருங்கடல்‌! உதரிப்‌ புதுமலர்‌ எஇருறு மன்றின்‌

'நிறைந்தார்‌ கையில்‌ நிறையத்‌ தந்தனர்‌. பெரியவர்‌ ஒருவர்‌, "பெண்ணே நகைமுத்து।. 'வேடப்‌ பனைநீ விரும்பிய துண்டோ? வாழ்வின்‌ துணைஎனச்‌ சூழ்ந்த துண்டோ?" என்னலும்‌, நகைமுத்‌ தெழுந்து வண௩௫,

  • வேடப்பனை நான்‌ விரும்பிய துண்டு;

வாழ்வின்‌ துணைஎன்று சூழ்ந்தேன்‌” என்றாள்‌.

  • வேடப்‌ பாநீ மின்தகை முத்தை,

மணக்கவோ நினைத்தாய்‌? வாழ்க்கைத்‌ துணைஎன அனுக எண்ணமோ அறிவித்‌ இடுவாய்‌* என்னலும்‌ வேடன்‌ எழுந்து வணங்‌

  • மின்நகை முத்தை விரும்பிய துண்டு;

வாழ்வின்‌ துணையாய்ச்‌ குழ்ந்தேன்‌” என்றான்‌.