பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

*28

குமரியின் மூக்குத்தி

அன்று. வெள்ளிக்கிழமை. நாளும் கிழமையுமாகப் பார்த்துத்தான் எதிர் வீட்டு ஆட்டுக்குட்டி விருந்து சாப்பிட்டிருக்கிறது! ஆட்டுக்குட்டி என்று அப்போது சொன்ன பேரையே இப்போது சொல்வது முறையாகாது. இப்போது அது சாட்சாத் ஆடு; குட்டிப் பருவம் தாண்டி விட்டது.

எப்படியோ முண்டி அடித்துக்கொண்டு ஆடு கீரைத் தண்டைப் பட்சணம் செய்துவிட்டது. சரியாகப் பட்டப் பகல் பன்னிரண்டு மணி நேரத்தில் இந்தக் காரியத்தை அது செய்தது. விசாகன் காரியாலயம் போய்விட்டான். குழந்தைகள் பள்ளிக்கூடம் போய்விட்டார்கள். வீட்டில் உள்ள பெண்களுக்கு அது ஒய்வு நேரம். எல்லோரும் சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். முதல் நாள் இரவு கண் விழித்து என்னவோ வேலை செய்து கொண்டிருந்தார்கள். இன்று பன்னிரண்டு மணி வேளையில் பகலில்தான் உலகையே மறந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள்.

இந்தச் சுபமுகூர்த்தத்தில் ஆடு எங்கெங்கோ முட்டி ஆராய்ந்து ஒரு குறிப்பிட்ட இடத்தின் நெளிவு சுளுவு தெரிந்து உள்ளே நுழைந்து விட்டது. வாசலில் எல்லையடைப்பைப் பூட்டித் தான் இருந்தார்கள்.அது மனிதர் நுழையாத தற்காக அல்லவா? .

ஶ்ரீமான் ஆட்டையா தம்முடையநாக்குக்கொண்ட மட்டும் கீரைத் தண்டை ருசி பார்த்துவிட்டார். அது வந்த சோடும் தெரியவில்லை:போன சோடும்தெரியவில்லை; பெண்மணிகள் மூன்று மணிக்கு விழித்துக்கொண்டு பார்த்தால் கீரைப் பாத்தி புயலடித்த தோப்புப் போல இருந்தது.

"ஐயையோ!" என்று அலறினார்கள். விசாகன் வந்தால் அமர்க்களப்படும்என்று அஞ்சினார்கள். சின்னத்தம்பியின் ஆடுதான் கடித்திருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டார்கள்.