பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயில்பாட்டு:ஒரு மதிப்பீடு 85 பட்டைப்போல் பளப்பளப்பாக்கிய (Mercirised) மிக நுட்ப மான (Superfine) ஆலைவேட்டியைப் போலவும் உள்ளது: என்று சொல்லி வைக்கலாம். இது பாரதியாரின் தனிவெற்றி: பாட்டு முழுதும் ஒரே இனிமை யானவாக்கு. ஒரே கவிதை வெள்ளம், வேகமும் உயிரோட்டமும் நயமும் எங்கும்குறைய வில்லை. திருவாசகத்தின் நடையைக் குயில் பாட்டின் நடைக்கு ஒப்புக் கூறலாம். குயில் பாட்டும், திருவாசகமும் தமிழ் மொழியின் இனிமைக்கும் எல்லை காட்டுகின்றன என்று கூடச் சொல்லி வைக்கலாம். பெரியாழ்வார், ஆண்டாள் இவர்களின் பாசுரங்கள் உள்ளத்தை உருக்கும் பாங்கிலும் கவிதையின் பாவத்திலும் மேற்குறிப்பிட்இரண்டு நூல்களைவிட ஒருபடி தூக்காக இருக்கலாமோ என்று தோன்றலாம். ஆனால், இனிமையிலும் ஒசையின்பத் திலும் அவை ஒருபடி குறைவாகவே இருப்பதை உணரமுடி கின்றது. சொல்வளம் முதலியவை : பாரதியாரின் சொல்வளமும் சொற்றொடர் வளமும் இப்பாட்டில் மிக அற்புமாக அமைந் துள்ளன. சாதாரண மொழிகளும், பேச்சு வழக்கு மொசி களும் தாம் சேர்ந்தவரின் புண்ணியத்தால் உயர்ந்த பலத் தைப் பெற்று இலங்குகின்றன - கன்னனை அடைந்த நாகக் கணை பலம் பெற்றது போல. தனிச் சொற்கள் சிறப்புடன் ஆளப்பெற்றிருப்பதைப் பாட்டைப் படிக்கும் போதே உணர்ந்து அநுபவிக்கலாம். கவிஞரின் கருத்திற்கேற்ப மொழி வளைந்து கொடுக்கும் அற்புதந்தைப் பாட்டெங்கும் கண்டு மகிழலாம். தனிச் சொற்களின் ஆட்சியால் மட்டிலும் சொல்வளம் நிரம்பி விடுவதில்லை. சொற்கள் ஒன்றோ டொன்று காதல் மணம் புரிந்து கலந்து வாழும் காட்சியே சொற்றொடர் வளமாகும். இதிலும் பார் தி யா ரின் கைவண்ணத்தைக் காணலாம்.