பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 குயில்பாட்டு:ஒரு மதிப்பீடு யும் தன் மனம் பட்டபாட்டையும் தொடக்கம் முதல் இறுதி வரை தேனினும் இனிய செந்தமிழில் தங்கு தடையில்லாத மெல்லோசை வளத்துடன் எடுத்துக் காட்டி வருணித் திருக்கும் உயர்கவிதைப் பண்பு பாரதியின் கவிதைப் படைப்பில் சிற்சில இடங்களில்தான் தென்படுகின்றது. அவருடைய கவிதைப் படைப்புகளை ஒரு சேர வைத்து நோக்கினால் குயில் பாட்டும்", 'கண்ணன் பாட்டும்’ "பாஞ்சாலி சபதமும் ஒன்றுக்கொண்டு போட்டி போட்டுக் கொண்டு தான்தான் சிறந்தது என்று அறிவிப்பதுபோல் தோன்றினாலும் சிலருக்கு இதுவே மிகச் சிறந்தது என்ற கருத்தையும் எழுப்புதல் கூடும். பாட்டு துவலும் கதை விந்தையாயும், விசித்திரமாயும், இயல்புக்குப் பொருத்தமின்றியும் தோன்றினாலும் குயில் பாட்டு ஒர் அருமையான காதல் காவியம் என்பதை எல்லாத் திறனாய்வாளர்களும் ஒப்புக் கொள்ளத்தான் செய்வார்கள். அகத்துறைகளின் பெயர்கள் இதில் சொல்லப்பெறாவிடினும் துறைக் கூறுகள் ஊடும் பாவும்போல் இழையோடியிருப் பதைச் சங்க நூல்களைப் பயின்ற நினைவுடன் ஊன்றி நோக்குவார்க்குப் புலனாகாமற் போகாது. பாட்டின் எளிய, சரளமான, உயிரோட்டங் கொண்ட கவிதை நயஞ் செறிந்த அகவல் போன்ற தீந்தமிழ் நடை அதன் தனிச் சிறப்புக்குக் கைகொடுத்து உதவியுள்ளது. பத்துப் பாட்டிலும் எட்டுத் தொகை நூல்களிலும் படிப்போர் சற்று விறைப்பானபுளியங்கஞ்சி போட்ட பழங்காலத்து இருபதாம் நம்பர் ஈரிழைத் துண்டு போன்ற நெகிழ்ச்சியற்ற~நடையைக் காண் பார்கள். பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் மனோன்மணியத் தின் நடையும் இதற்குவிலக்கு இல்லை. ஆனால், குயில் பாட்டின் நடை தமிழிலக்கியம் இதத்குமுன் கண்டிராத ஒர் இனிய தெள்ளிய மெல்லோசை மிக்க நடையைக் கொண் டிலங்குகின்றது; பின்னியின் மேலாடைப் பட்டுபோலவும்,