பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயில்பாட்டு:ஒரு மதிப்பீடு 33 ளோசை நிறைந்தது. சில இடங்களில் கலித்தளையும் தலை காட்டுகின்றது. கலித்தளை ஒரடியின் முதலிலும் கடையிலும் வருகின்றனவேயன்றி இடையில் வருவதில்லை. ஆனால் சில இடங்களில் வெண்டளை வருமாறு அமைக்கவும் முயன்றுள் ளார். குயில் பாட்டினைக் கலிவெண்பா யாப்பில் அடக்க லாம். கலிவெண்பாவில் ஒவ்வோர் இரண்டாம் அடியிலும் தனிச் சொல் அமைதல் வேண்டும். குயில் பாட்டில் இந்த முறை மேற்கொள்ளப் பெறவில்லை. பாரதியாருக்கு முன்னரே மாணிக்கவாசகர் தம்முடைய சிவபுராணத்திலும் அருணகிரியார் தம்முடைய கந்தர் கலிவெண்பாவிலும் இந்த விதியைப் புறக்கணித்து விட்டனர். சுலிவெண்பாவின் இறுதியடி முச்சீரால் அமைந்து, நாள், காசு மலர், பிறப்பு என்ற நான்குசீர்களில் ஏதாவது ஒன்றால் இறுதல் வேண்டும். இந்த விதியும் இந்தப்பாட்டில் அமையவில்லை. ஆகவே, குயில் பாட்டின் யாப்பு ஆசிரியம் என்றோ கலிவெண்பா என்றோ சொல்ல முடியவில்லை. இந்த இலக்கண மரபினைப் பாரதியார் தகர்த்தெறிந்து விட்டார். இந்தப் புத்தமைப்பு முறை ஒரு மொழியில் புதிய ஒலியநயமுள்ள பாடல்களைப் அமைத்தற்கு நெகிழ்ந்து கொடுக்கின்றது. இதனால்தான் குயில் பாட்டின் நடை படிப்போரின் சிந்தையையும் சிந்தனையையும் கவர்வதாக அமைந்து விடுகின்றது. யாப்பு முறை : குயில் பாட்டில் புதிய யாப்பு முறைகளில் பாரதியாரின் கனிந்த கவிதை படைக்கும் ஆற்றலும், பெருமித தோரணையுடன் திகழும் கற்பனையாற்றலும், உள்ளத்தைப் பறிகொடுக்கச் செய்ய வல்ல இசையின் ஆற்றலும் ஒருங்கே இணைந்து களி நடம் புரிவதைக் காண லாம். இந்த வற்றாத அமுத ஊற்றிலிருந்து பாடல் முழுதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதைப் பார்க்கலாம். மாஞ் சோலையில் கண்ட குயிலைக் கண்டு மயங்கிக் காதல் கொண் டதையும் அதன் பாட்டைக் கேட்டு தனக்கு நேர்ந்தவற்றை