பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-2 குயிலின் காதற் கதை குயிலின் மோகனபாட்டு முடிவு பெறுகின்றது. எங்கும் அமைதி நிலவுகின்றது. சோலையில் பல இடங்களில் சூழ்ந்திருந்த பறவைகள் யாவும் எங்கெங்கோ சென்று மறைந்து விடுகின்றன. பாட்டைக் கேட்டக் கவிஞரின் மனத் தில் இன்பமும் துயரும் இணைகின்றன. இந்நிலையில் ஒரு மரக்கிளையில் பெட்டைக் குயிலொன்று தனிமையில் சோக முற்று வாடுவதைக் காண்கின்றார் கவிஞர். உடனே அ.திருந்த மரத்தடிக்குச் சென்று, 'பேடே! திரவியமே! பேரின்பப் பாட்டுடையாய்! எழுலகம் இன்பத்தீ ஏற்றும் திறனுடையாய்! பிழையுனக் கெய்தியதென்? பேசாய்!' என வினவுகின்றார். அந்த மாயக் குயிலும் மானுடவர் பேச்சினிலோர் மாயச்சொல் கூறுகின்றது. காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லையெனில் சாதலை வேண்டித் தவிக்கின்றேன்" என்று மறுமொழி தருகின்றது. கவிஞரும் அது காதலை அடையாத காரணம் என்னவென்று திரும்பவும் வினவு ! இபா குயிலின் காதற்கதை அடி (8.10) 2. டிெ. டிெ. அடி (1334)