பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயில்பாட்டு: ஒரு மதிப்பீடு #9 சற்றே தலைகுனிந்தாள், சாமி! இவளழகை எற்றே தமிழில் இசைத்திடுவேன்? கண்ணிரண்டும் ஆளை விழுங்கும் அதிசயத்தைக் கூறுவ:னோ? மீள விழியில் மிதந்த கவிதையெலாம் சொல்லில் அகப்படுமோ? துயசுடர் முத்தையொப்பாம் பல்லில் கனியிதழில் பாய்ந்த நிலவினையான் என்றும் மறத்தல் இயலுமோ? பாரின்மிசை நின்றதொரு மின்கொடிபோல் நேர்ந்த மணிப் பெண்ணரசின் மேனி நலத்தினையும், வெட்டினையும், கட்டினையும் தேனி லினியாள் திருத்த நிலையினையும், மற்றவர்க்குச் சொல்ல வசமாமோ?"...... என்று தன்னை மறந்த நிலையில் பேசுவர். கவித்துவத்தின் கொடுமுடியினை இதில் காண முடிகின்றது. அளவான வருணனை கதை காவியமாக உருவெடு கும்போது அக்கதையில் வரும் நிகழ்ச்சிகளில் ஒரு சுவையும் அவை மேன்மேலும் எப்படி மாறி முடிவு பெறும் என்று சிந்திப்பதில் ஏற்படத்தக்க எதிர்பார்ப்புகளும் அமைதல் வேண்டும். சில கவிஞர்களின் படைப்பில் வருணனையில் ஈடுபட்டுக் கதையை மறந்து விட்டவர் போன்ற ஒரு நிலை ஏற்பட்டு விடுகின்றது. இஃது இவ்வகைக் காவியத்திற்குச் சாதாரணமாக நேரக் கூடிய ஒரு குறையாகும். பாரதியார் இதனை நன்கு உணர்ந்தவராதலால், நாசக் கதையை நடுவே நிறுத்திவிட்டுப் பேசுமிடைப் பொருளின் பின்னே மதிபோக்கிக் கற்பனையும் வர்ணனையும் காட்டிக் கதைவளர்" தவின்றிக் கதையை நடத்திச் செல்லும் சிறப்பு படிப்போரின் உள்ளத்தை ஈர்த்து விடுகின்றது. இந்தப் பாட்டில் கதையின் 5. டிெ.9. குயிலின்முற்பிறப்பின்வரலாறு-அடி27-241) 6. டிெ. 6. இருளும் ஒளியும்-அடி (25.27)