பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 குயில்பாட்டு: ஒரு மதிப்பீடு நிகழ்ச்சிகள் ஒர் இடத்திலாவது வருணனையில் மறைய வில்லை; அன்றியும் அவை கதை எங்ங்னம் முடியுமோ என்ற ஆவல் குறையாமல் வளர்ந்து எடுத்துப் படித்த பாட்டை ஒரே மூச்சில் இறுதி வரையில் படித்து முடிக்கத் துரண்டும் பாங்கில் அமைந்துள்ளன. கதையின் இறுதியில் கவிஞனின் சோலை-குயில்-காதல் கனவெல்லாம் திடீரென மறைந்து விடவே, அவர் கண் விழித்து பார்க்கும் போது, சூழ்ந்திருக்கும் பண்டைச் சுவடி எழுதுகோல் பத்திரிகைக் கூட்டம் பழம்பாய் வரிசையெல்லாம் ஒத்திருக்க நாம் வீட்டில் உள்ளோம் என வுணர்ந்தேன். ான்று கனவு நீக்கம் பரிதாபமாக அமைகின்றது. கவிஞரும் சிறிது மனந்தேறி தம் புகற்கனவு, மாலை யழகின் மயக்கத்தால் உள்ளத்தே தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சி என்று கண்டு கொள்கின்றார். இங்ங்ணம் கதையும் கவிஞரின் கதை கூறும் முறையும் நம்மை வியக்கச் செய்து நம் உள்ளத்தை அவற்றில் பறிகொடுக்கச் செய்து விடுகின்றது. தொடர்பான நிகழ்ச்சிகள்: நிகழ்ச்சியுரைக்கும் கவிதை வகையைச் (Narrative poem) சார்ந்த குயில்பாட்டு மிக அற்புதமாய் அமைந்துள்ளது. கதைப் போக்கின் தொடர்ச்சி யும் இந்த வகைக் கவிதையின் முக்கிய பண்புகளாகும். கவிதையைப் படிக்கத் தொடங்கினவர் அதனை முடிப்பதற்கு முன் கீழே வைக்க முடியாத வண்ணம் சுவை அமைய வேண்டுமானால் கதை மாந்தர்களும் நிகழ்ச்சிகளும் தெளி வாக, அடுக்கடுக்காக, ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர வேண்டும். மேலும், வருணனை, அறிவுரை பகர்தல் முதலிய நீர்த்தேக்கங்ளில் தங்க விடாமல் கதை என்ற வேக