பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

יא "א முகவுரை Vዝ வாக்குண்டாம் முதலிய நீதி நூல்கள் மாளுக்கர்களுக்குப் பாடமாக உள்ளதை யாவரும் அறிவர். அணிலாடு முன்றிலார் என்பவருடைய இயற் பெயர் இன்னதென்று தெரியவில்லை, பாழாய்ப் போன ஊரிலுள்ள வீட்டு முற்றத்தை அணிலாடு முன்றில்’ என்று பாடியிருக் கிருர், அதனுல் இந்தப் பெயர் அவருக்கு வந்தது.

இதில் உள்ள ஏழு பாடல்களிலிருந்து சங்க காலத்து மக்களின் வாழ்க்கையைப் பற்றியும், அக்காலத்து மக்களின் எண்ணங்களைப் பற்றியும் பல செய்திகளை அறிந்து கொள்ள லாம். தெய்வ நம்பிக்கையுடைய தமிழர்கள் வணங்கிய கடவுளரில் முருகனும், இறையனரும் இந்த நூலில் வருகின்றனர். சிற்றுார்களும் பேரூர்களுமாகப் பல ஊர்கள் தமிழ் நாட்டில் இருந்தன. சில காலங்களில் பாலை நிலத்திலுள்ள சிறிய ஊர்களில் வாழ்ந்த மக்கள் வேறு ஊர்களுக்குக் குடி போனர்கள். ஊர்களில் திருவிழா நடைபெற்றது. அப்போது ஊர் மிக அழகு பெற்று விளங்கும். ஆடவரும் மகளிரும் அன்பு செய்து இல்லறம் நடத் தினர். இல்வாழ்வு நிரம்புவதற்காக ஆடவர் வேற்றுார் சென்று பொருள் ஈட்டி வந்தனர். மகளிர் அவர்கள் பிரிந்த காலத்தில் மனம் வருந்தினர். மயில் போன்ற சாயலும் செறிந்த பற்களும் அடர்ந்த கூந்தலும் நல்ல மகளிரின் இலக்கணம். அவர்கள் கூந்தலுக்கு இயற்கையாகவே மணம் உண்டு. அந்தக் கூந்தலில் பொன்னலான இழைகளை அணிந்து கொண்டார்கள். - தெய்வங்களே அழைத்துப் பாடிக் குறி சொல்லும் ஒரு வகை மகளிரை அகவல் மகளிர் என்று வழங்கினர். அவர்கள் நெல்லினுற் குறி பார்ப்பார்கள். அதைக் கட்டுப் பார்ப்பது என்று சொல்வார்கள். கட்டுப் பார்ப்பதனல் அகவல் மகளுக்குக் கட்டுவித்தி என்ற பெயர் வழங்கும். y