பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii குறிஞ்சித் தேன் அவள் மலைவளத்தைப் பாடுவாள். வீட்டில் யாருக்காவது நோய் வந்தால் கட்டுவித்தியை அழைத்து வந்து குறி பார்ப்பது அக்காலத்தில் வழக்கமாக இருந்தது. கட்டுவித்தி • ------ ፩ ፴ - கiண்: சங்கு மணி மாலையை அணிந்திருப்பதுண்டு. மடந்தை, அரிவை என்ற பெயர்கள் பெண்களின் பருவத்தைக் குறிக்கும் பெயர்களான லும் பொதுவாக மகளிர் என்னும் பொருளில் அவை இப் பாடல்களில் வந்துள்ளன. இயற்கை வளத்தை நன்முகப் பயன்படுத்திக்கொண்டு

வாழ்ந்தவர்கள் பண்டைத் தமிழர்கள். விலங்குகளும், மரஞ் செடி கொடிகளும் அவர்களுடைய வாழ்க்கையினூடே கலந்து நின்றன. புலவர்கள் அவற்றின் இயல்புகளே நன்கு அறிந்திருந்தார்கள். அவர்கள் பாடிய பாடல்களில் அவற் றைப் பற்றிய செய்திகள் அங்கங்கே விரவி வரும். சேவல் முருகன் கொடியாக இருப்பதையும், பாழான வீட்டில் அணில் விளையாடுவதையும் புலவர்கள் பின் வரும் பாடல்களில் சொல்லியிருக்கிருர்கள். வண்டில் நறுமணம் தேரும் ஆற்றலுடைய ஒரு சாதிக்குத் தும்பியென்று பெயர். பூந்ததைத் தேர்ந்து உண்பது அது. நறுமணத்தைக் கண்டு உணர்வது, பூக்களில் உள்ள தேனே மொண்டு சென்று பெரிய தேனடைகளே மலேச் சாரலில் வண்டுகள் வைக்கும். குறிஞ்சிப் பூவில் உள்ள தேனேத் திரட்டும் வண்டுகளேயும், கொன்றைப் பூவில் வந்து மொய்க்கும் வண்டுகளையும் புலவர்கள் நமக்குக் காட்டுகிருர்கள். தாமரை மிகச் சிறந்தது. அதன் மலரை இறைவன் திருவடிக்கு ஒப்பாகக் கூறுவர். குறிஞ்சி, பாலே, முல்லை, மருதம், நெய்தல் என்று அகப்பொருளில் ஐந்து டுனேகள் உண்டு. ஒவ்வொரு திணைக்கும் உரிய நிலமும் காலமும் உண்டு. திணைக்குரிய நிலங்களே அந்த அந்தப் பெயரா லேயே குறிப்பர். குறிஞ்சித்தினேக்கு உரிய நிலத்துக்கும் குறிஞ்சி என்றே பெயர். முதலில் குறிஞ்சி என்பது நிலத் துக்கு பெயராக வந்து பிறகு அங்கே நிகழும் ஒழுக்கத்துக்