பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை ix குப் பெயராயிற்று. தலைவனும் தலைவியும் ஒன்றுபடுவதும் அதற்கு முன்னும் பின்னும் நிகழ்வனவு மாகியவற்றைக் குறிஞ்சியின் ஒழுக்கமாகச் சொல்வார்கள். அந்த ஒழுக்கத் தையே உரிப்பொருள் என்று இலக்கண நூல் சொல்லும். நிலமும் காலமும் முதற்பொருள் என்ற பெயர் பெறும். அந்த நிலத்தில் உள்ள தெய்வம், விலங்கு, பறவை, பூ, மரம், மக்கள் ஆகிய எல்லாம் கருப்பொருள் என்று சொல்லப் பெறும். - நாடகத்தில் இன்ன இடம் என்றும் இன்ன காலம் என்றும் இன்னுர் பாத்திரங்களென்றும் ஒவ்வொரு காட்சிக் கும் குறிப்பிடுகிருர்கள். அவ்வாறே அகப்பொருள் நிகழ்ச் சிக்கு இவை உறுப்புக்களாக அமைகின்றன. - 拳 ஒவ்வொகு திணைக்கும் தனித்தனியே முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள்களின் வரையறை உண்டு. உரிப்பொருள் என்பதுதான் முக்கியமானது. காதல் நாடகத் தின் இயக்கம் உரிப்பொருள். அந்த உரிப்பொருள் நிகழ மற்றவை துணையாக நிற்கின்றன. • % முதற்பொருள்கள் நிலமும் காலமுமாம். குறிஞ்சி நிலத் துக்குப் பெயர் குறிஞ்சி மலரால் வந்தது. அது மிகுதியான தேனையுடைய மலர். அதன் தேனைப் பெருந்தேன் என்று ஒரு புலவர் சொல்கிருர். அதன் கோல்கள் கருமையாக இருக்கும். மலையிலும் மலேயைச் சார்ந்த இடங்களிலுமே குறிஞ்சி வளரும். அந்தப் பகுதிகளே குறிஞ்சி நிலமாகும். குன்றி மணியை முருகன் உடைக்கு உவமையாக ஒரு புலவர் சொல்கிரு.ர். o பாலை நிலத்தைப்பற்றி ஒரே ஒரு செய்தி இதில் வரு கிறது. நடப்பதற்கு அரிய வழியும் அதற்கருகே குடியிருந்த வர்கள் ஒடிப்போன பாமூரும் ஒரு பாட்டில் காட்சியளிக் கின்றன. . . .