பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼 குறிஞ்சித் தேன் காடும் காட்டைச் சார்ந்த இடமும் முல்லை நிலமாகும். முல்லைத் திணைக்குரிய பருவம் கார்காலம். தலைவி வீட்டில் இருந்து தன் கடமையைச் செய்து தலைவன் வருமட்டும் பொறுத்திருப்பது முல்லைத்தினேயின் ஒழுக்கம்: உரிப் பொருள். இதை இருத்தல் என்று சொல்வார்கள், முல்லை. நிலத்தில் கொன்றைமரம் வளர்கிறது. அது அந்த நிலத்தின் கருப்பொருள்களில் ஒன்று. கார்காலத்தில் மலர்வது கொன்றை, அதன் மலர் பொன்னிறமானது, மிகச்செறி வாசுத் தழைத்து நிற்கும் கொன்றை மரங்களுக்கு மகளிரை உவமை கூறுகிருர் ஒரு புலவர், கடலிலே தோன்றும் பவழத்தை முருகனுடைய திரு. மேனிக்கு உவமையாக்குகிருர் பெருந்தேவஞர். மக்களின் உயர்வுக்குக் காரணமாகிய பண்புகளைப்பற்றி அங்கங்கே புலவர்கள் பாடுகிருர்கள். தொடர்பு இல்லா தாரிடம் செல்லும் அருளையும், தொடர்புடையவரிடத்துச் செல்லும் அன்பையும் ஒரு பாடல் சொல்கிறது. ஒருவர் பால் அன்பிருந்தால் அவருடைய மனத்துக்கு எது உவப்போ அதை அறிந்து அதற்கு ஏற்ப ஒன்றைக் கூறுதல் தவறு. உண்மையை உள்ளபடியே சொல்ல வேண்டும். கண்டதைச் சொல்ல வேண்டுமே யொழிய, பழக்கத்தை நினைந்து உண்மைக்கு மாருக ஒன்றைச் சொல்லக் கூடாது. பொய் வழங்குதல் தவறு: ஆடவர் பொய் வழங்கமாட்டார். குறித்த காலத்தில் வந்துவிடுவார் என்று நம்பி மகளிர் அவர் பிரிவைத் தாங்கியிருப்பார்கள். 事 இலேவனுக்கும் தலைவிக்குமிடையே உள்ள காதலைத் தமிழ் நூல்கள் மிகச் சிறப்பாகப் பேசுகின்றன. அவர் களிடையே அமையும் நட்பு, கண்டமாத்திரத்தில் உண்டாவ தன்று. பிறவிதோறும் ஒன்றுபட்ட உயிரும் உள்ளமும் படைத்தவர்களே உண்மைக் காதலைப் பெறுகிரு.ர்கள். பிறவிதோறும் பயின்ற பயிற்சியினல் காதலனும் காதலியும்