பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை χθ' ஒன்றுபடுகிருர்கள், அந்த உறவை, பயிலியது கெழீஇய நட்பு’ என்று பாராட்டுகிருர் இறையனர். அதற்கு உவமையே இல்லை. அது நிலத்தினும் பெரியது: வானைக் காட்டிலும் உயர்ந்தது; கடலேக்காட்டிலும் ஆழமானது; மிக மிக இனியது. - 3. இந்தக் காதல் வாழ்க்கையைச் சித்திரிக்கும் அகப் பொருட் பாடல் ஒவ்வொன்றும் யாரேனும் ஒருவருடைய கூற்ருக இருக்கும், நாடகத்தில் பாத்திரங்களின் பேச்சாகவே எல்லாம் அமைவதுபோல. இயற்கையின் எழில், விலங்குகளின் இயல்பு, மக்களின் உணர்ச்சி முதலிய எல்லாச் செய்திகளும் இந்தக் கூற்று வகைகளிலே இயைந்து வரும். இவற்றைக் கூறும் தலைவன், தலைவி, தோழி முதலியவர்கள் கற்பனை உலகத்து மக்கள். இன்னர் என்று பெயர்கூறி உணராதவர்கள். காதலை யாரோடும் சார்த்திச் சொல்லக்கூடாது, சொன்னல் அதன் தூய்மை கெட்டு விடும் என்று பழந்தமிழர் எண்ணினர்கள். அதனல், குறிப் பிட்ட ஒருவரைப் பாட்டில் புகழவேண்டுமானல் அவர் பெயரைப் பாட்டில் எங்கேனும் நுழைத்து விடுவார்கள். மேலே காட்டிய திப்புத்தோளார் பாட்டில் முருகன் வருகிருன். அந்தப் பாட்டில் அந்த மலை முருகனுடைய மலே என்று அவன் பெயரைச் சார்த்திப் பாடுகிருர் புலவர். இப்படிச் சார்த்துவகையினல் தெய்வங்களின் பெயர்களும், செல்வர்களின் பெயர்களும் பாட்டில் வருமேயன்றி, அவர் களேயே காதல் நாடகத்தின் பாத்திரங்களாக வைப்ப தில்லை. அப்படி வைத்தால் அது அகப்பொருளாகாது. பிற் காலத்தில் கடவுளை நாயகனக வைத்துப் பாடிய பாடல்கள் பல உண்டு. அவை யாவும் அகத்துறைக்குப் புறம்பாய், புறப்பொருளில் பாடாண்டினை என்னும் பகுதியைச் சார்ந்தவை. காதலின் உயர்வையும் தூய்மையையும் காட்டவே இத்தகைய மரபைத் தமிழ்ப்புலவர்கள் வகுத்துக் கொண்டார்கள் என்று தோன்றுகிறது.