பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய சுதந்தரப் போராட்டம்

79

இந்திய சுதந்தரப் போராட்டம் ஆசை அவர்களுக்கு ஏற்பட்டது. இந்திய மன்னர்களிடையே இருந்து வந்த பகைமை உணர்ச்சியையும், சண்டையையும் பயன் படுத்தி நாட்டைக் கைப்பற்ற அவர்கள் சூழ்ச்சி செய்தனர். இறுதியில் ஆங் கிலேயரே வெற்றி பெற்றனர். இந்தியா முழுவதும் அவர்கள் வசமாயிற்று. பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்ட பிறகு இந் தியாவில் உறுதியான அரசாங்கம் அமைந் தது. ஆனால் நாளடைவில் இந்தியர்கள் அந்நியருக்கு அடிமைப்பட்டிருக்க விரும்ப வில்லை. இந்திய அரசாங்கத்தில் இந்தியருக் கும் இடம் வேண்டுமென்று பிரிட் டிஷாரிடம் கேட்டனர். பிரிட்டிஷ் அரசாங் கம் சிற்சில உரிமைகள் அளிப்பதாக அவ் வப்போது கூறிவந்தது. ஆனால் இவற்றால் பயன் ஏதும் இல்லை என்று இந்தியர் உணர்ந்தனர். அனைவரும் ஒன்றுகூடி ஒரு முகமாக அரசாங்கத்தை வற்புறுத்திக் கேட்க விரும்பினர். அதற்காக 1885-ல் சபை ஒன்று அமைக்கப்பட்டது. இந்தச் சபைதான் இந்திய தேசீயக் காங்கிரஸ். இந்தச் சபையாலும் ஆண்டுகள் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்க்க முடிய வில்லை. 1905-ல் வங்காளத்தை இரு மாகாணங்களாகப் பிரிக்க பிரிட்டிஷார் திட்டமிட்டனர். இந்தியர் இத் திட்டத் தைக் கண்டித்துக் கிளர்ச்சி செய்தனர். வங்காளத்தில் விபின சந்திர பால், மகா ராஷ்டிரத்தில் லோகமானிய திலகர், பஞ் சாபில் லாலா லஜபதி ராய், தமிழ்நாட் டில் வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகாகவி சுப்பிரமணிய பாரதியார், சுப்பிரமணிய சிவா ஆகியோர் தீவிரமான கிளர்ச்சியில் இறங்கினார்கள். இந்தியாவின் குறிக்கோள் முழுச் சுதந்தரமே என்று இவர்கள் அறிவித் தனர். "சுதந்தரம் எனது பிறப்புரிமை" என்று திலகர் முழங்கினார். மக்கள் உள் ளத்தில் விடுதலை வேட்கை மூண்டது; கிளர்ச்சி வலுத்தது; மக்கள் பிரிட்டிஷ் சரக்குகளைப் புறக்கணித்தார்கள்; பிரிட் டிஷ் அரசாங்கம் இக்கிளர்ச்சிகளை ஒடுக்க முயன்றது. திலகர் நாடு கடத்தப்பட்டார். பொதுக்கூட்டங்களில் மக்கள் தடியடிக் குள்ளானார்கள். மக்கள் பலர் கைது செய் யப்பட்டனர். பிரிட்டிஷ் அரசாங்கம் பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கியது. காங்கிரஸை எதிர்க்கும்படி முஸ்லிம்களைத் தூண்டிவிட் டது. முஸ்லிம்கள் தமக்குள் 'முஸ்லிம் லீகு' என்ற ஒரு கட்சியை அமைத்துக் கொண்டு பிரிட்டிஷாருக்கு ஆதரவாகப் பேசலாயினர். இந்த நிலையில் பிரிட்டன் துருக்கியின் மேல் போர் தொடுத்தது. இந்திய முஸ்லிம்கள் வெகுண்டனர். காங் கிரஸுடன் லட்சுமணபுரியில் அவர்கள் ஓர் ஒப்பந்தத்துக்கு வந்தனர். 1916-ல் காங் கிரஸும், முஸ்லிம் லீகும் இணைந்து பிரிட் 79 டிஷ் அரசாங்கத்தை எதிர்க்க உடன்பட் டன. இந்நிலையில் காந்தியடிகள் (த.க.) தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்து சேர்ந்தார். அவர் அந்நாட்டில் இந் தியர் உரிமைக்காக அரசாங்கத்தை எதிர்த் துப் போராடியவர். இந்தியாவிலும் பிரிட் டிஷாரிடமிருந்து இந்தியருக்காகப் உரிமைகளைப் பெறும் முயற்சியில் ஈடுபட் பல டார். 1914 முதல் 1918 வரை நடந்த முதல் உலக யுத்தத்தில் இந்தியா பொன்னையும், பொருளையும், போர்வீரர்களையும் பிரிட் டிஷாருக்குக் கொடுத்து உதவிற்று. பிரிட் டனுக்குப் பெரும் வெற்றி கிடைத்தது. இதனால் 1919-ல் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியருக்குச் சில உரிமைகளை வழங்க இசைந்தது. இந்த அரைகுறை உரிமைகளை ஏற்றுக்கொள்ளக் காங்கிரஸ் மறுத்தது. காந்தியடிகளும் இவற்றை வன்மையாகக் கண்டித்தார். காந்தியடிகள் இந்திய அரசியல் கிளர்ச்சி களில் பல புதுமைகளைப் புகுத்தினார்; மக் களிடம் சுதந்தர உணர்ச்சியைத் தூண்டி னார். 'அஹிம்சை முறையில் ஒத் துழையாமை' இயக்கம் ஒன்றைத் தொடங்கினார். நாடெங்கும் இந்த இயக கம் வெகு வேகமாக வளர்ந்தது. சுதந் தரக் கிளர்ச்சி இந்தியா முழுவதிலும் பரவிற்று. பள்ளிக்கூடங்களுக்குச் செல்ல மாணவர்கள் மறுத்தனர் ; நீதிமன்றங் களுக்குச் சென்று வழக்காட வழக்கறிஞர் கள் மறுத்தனர்; சட்டசபையை விட்டு உறுப்பினர்கள் வெளியேறினர். சில காந்தியடிகளின் சுதந்தரப் போராட்டம் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குப் பெரும் அச் சத்தை மூட்டியது. 1919-ல் பிரிட்டிஷ் அரசாங்கம் 'ரெளலட்' சட்டங்கள் என்ற சட்டங்களை இயற்றி மக்களுக்குக் கொடுமை இழைத்தது. இச்சட்டத்தின் கீழ் யாரும் விசாரணையின் றியே சிறையிடப் படலாம். அரசாங்கத்தின் நேர்மையற்ற செயல்களை எதிர்த்து காந்தியடிகள் 'சத் தியாக்கிரகம்' ஒன்றைத் தொடங்கினார். மக்கள் ஆங்காங்கு கூட்டங்கூடி பிரிட்டி ஷாரின் கொடுங்கோன்மையைக் கண் டித்தனர். பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஜாலியன்வாலா பூங்காவில் மக்கள் ஒன்றாகக் கூடியிருந்தபோது அவர்கள்மேல் ஜெனரல் டயர் என்ற பிரிட்டிஷ் தளபதி எந்திரத் துப்பாக்கியால் பலமுறை சுட் டான். இதில் 379 பேர் மாண்டனர்; 1,200 பேர் காயமடைந்தனர். மக்கள் பல வகை யில் பிரிட்டிஷாரிடம் துன்புற்றனர். காந்தி யடிகள் சட்ட மறுப்பு, வரிகொடாமை ஆகிய இயக்கங்களைத் தொடங்கினார். அவர் 1921-ல் கைது செய்யப்பட்டார். அவருக்கு அப்போது வல்லபபாய் பட்டேல் பெருந் துணையாக இருந்தார்.