பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

இந்திய சுதந்தரப் போராட்டம்

ராஜேந்திர பிரசாது இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் இந்திய சுதந்தரப் போராட்டம் இந்தியாவின் தந்தை காந்தியடிகள் சுதந் இத்தனை கிளர்ச்சிக்கும் பிரிட்டிஷாரின் மனம் மாறவில்லை. இந்தியருக்குச் தரம் வழங்கும் எண்ணமே அவர்களுக்கு ஏற்படவில்லை. காந்தியடிகள் உப்பு சத்தி யாக்கிரகத்தை 1930-ல் தொடங்கினார். பிரிட்டிஷ் அரசாங்கம் இக்கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களைப் பல இடங்களில் துப் பாக்கியால் சுட்டது. இதிலும் பலர் கொல்லப்பட்டனர்; பல்லாயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். 1939-ல் இரண்டாம் உலக பிரிட்டிஷ் அரசாங்கம் பிறகு லண் டனில் வட்ட மேசை மாநாடு கூட்டி இந் தியரைச் சமரசத்துக்கு அழைத்தது. இரண்டாம் மாநாட்டில் காந்தியடிகள் கலந்து கொண்டார். ஆனால் இந்தியாவுக் குச் சுதந்தரம் வழங்கும் நோக்கமே பிரிட் டிஷாருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. யுத்தம் தொடங்கிற்று. 1942-ல் காந்தியடிகள் "இந்தியாவை விட்டு வெளியேறு" என்ற இயக்கத்தைத் தொடங்கினார். காந்தியடி களும் அவருக்குத் துணையாக நின்ற ஜவாஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் பலரும் சிறையிடப்பட்டனர். இந்த இயக்கத்தை ஒடுக்க அரசாங்கம் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. அப்போதும் இந்திய மக்கள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மிகப் பலர் விசாரணை யின்றியே சிறையிடப்பட்டனர். முஸ்லிம் லீகு தலைவர் ஜின்னா, முஸ்லிம் மக்களுக் குத் தனிநாடு பிரித்துக் கொடுக்கும்படிக் கேட்டார். சுபாஷ் சந்திர போஸ் என்ற வங்க நாட்டுப் பெருந்தலைவர் சிங்கப்பூருக் குச் சென்று இந்திய தேசீயப் படை ஒன் ஜவாஹர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதம மந்திரி றைத் திரட்டினார். இப்படையின் உதவி யுடன் அவர் பிரிட்டிஷாரை எதிர்த்துப் போரிட்டார். 1945-ல் இரண்டாம் உலக யுத்தம் முடிவுற்றதும் இந்திய மக்களிடையே சுதந் தர வேட்கை மேலும் பெருகலாயிற்று. இதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் இணங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. பிரிட் டிஷ் அமைச்சர் மூவர் இந்தியாவுக்குத் தூது வந்தனர். இந்தியத் தலைவர்களுக் கும் அவர்களுக்குமிடையே ஓர் உடன் படிக்கை ஏற்பட்டது. அதன்படி 1946-ல் இந்தியத் தலைவர்கள் இந்திய அரசாங்கத் தைத் தாமே மேற்கொண்டு நடத்த லாயினர். வடமேற்கு எல்லை மாகாணத் திலும், சிந்துவிலும், மேற்குப் பஞ்சாபி லும், வங்காளத்தின் கிழக்குப் பகுதியிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருந்தனர். இந்தப் பகுதிகளையெல்லாம் சேர்த்துப் பாக்கிஸ் தான் என்ற ஒரு தனிச் சுதந்தர நாடாக பிரிட்டன் அமைத்தது. 1947 ஆகஸ்ட் 15-ல் இந்தியாவுக்கு பிரிட்டன் சுதந்தரம் வழங்கிற்று.ஜவாஹர் லால் நேரு தலைமையில் சுதந்தர இந்திய அரசாங்கம் பதவி ஏற்றது. அரசியல் நிருணய சபை ஒன்று அமைக்கப்பட்டது. அதன் தீர்மானத்தின்படி இந்தியா 1950 ஜனவரி 26-ல் முழுச் சுதந்தரமுள்ள குடியரசு நாடாக மாறியது. ராஜேந்திர பிரசாது இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ஆனார். ஒவ்வோர் ஆண்டும் இவ் விரு நாள்களையும் முறையே இந்திய சுதந் தர தினமாகவும், இந்தியக் குடியரசு தின மாகவும் நாம் கொண்டாடி வருகிறோம்.